“உன் புருஷனும் நானும் எவ்ளோ நெருக்கம் தெரியுமா?”.. ‘போட்டுக்கொடுத்த கள்ளக்காதலி!’.. மனைவியின் சோக முடிவு.. ஐடி கணவர் உட்பட 3 பேர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் ஐ.டி ஊழியராக இருந்தவருமான விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜயகுமார் தன் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார். அப்போது அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வந்த போன் அழைப்பை எடுத்து பேசிய ஷோபனாவிடம் யாரோ ஒரு பெண், தான் விஜயகுமாரின் காதலி என கூறியதால், அதிர்ந்த ஷோபனா இதுகுறித்து கணவரிடம் கேட்க, அவரோ வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி, தன் தவறை திசை மாற்றியுள்ளார். இதனால் ஷோபனா வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தன் மகன் விஜயகுமார் பணியை இழந்ததற்கு காரணம், அவரது மனைவி ஷோபனா வந்த நேரம்தான் என, ஷோபனாவின் மாமியார் செல்வராணி ஆபாசமாக பேசியதுதான் என கூறப்படுகிறது. இதனிடையே திருமணத்துக்கு முன்பில் இருந்தே காதல் மொழி பேசி வந்த விஜயகுமாரின் முன்னாள் காதலியான ஈரோட்டை சேர்ந்த அனு என்பவர் கேட்ட பணத்தை விஜயகுமார் தரவில்லை என தெரிகிறது. மேலும் அந்த காதல் உறவைத் தொடர்ந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனால் தக்க சமயம் பார்த்து விஜயகுமாருக்கு போன் செய்த அனு, ஷோபனா போனை எடுத்ததால் எல்லாவற்றையும் போட்டுக்கொடுக்க, அதுபற்றி ஷோபனா விஜயகுமாரிடம் கேட்க,  அப்போதுதான் தூங்கி எழுந்த விஜயகுமார், தான் சிக்கிக் கொண்டதை மறைப்பதற்காக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். விஜயகுமாருடன் சேர்ந்து அவரது தாயார் செல்வராணியும் ஷோபனாவை துன்புறுத்தி, வசைபாடி பேசியுள்ளார். 

இதனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், வீடியோ எடுத்தபடி பேசிய ஷோபனா,  “என் சாவுக்கு காரணமானவங்க யாரையும் சும்மா விடாதீங்க. சசாகப்போற நான்தான் யாருக்கும் பிரயோஜனப்படல. என் அப்பாவோட ஆசைப்படி, என் உடலை தானம் பண்ணிடுங்க! நான் போறேன்.. என் புள்ளைய பாத்துக்கங்க” என்று பேசி வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வொர்க் ஃப்ரம் பண்ணுவதற்காக வீடு வந்ததாக கூறியிருந்த விஜயகுமார், விஜயகுமாரின் தந்தை அன்பழகன், தாய் செல்வராணி உள்ளிட்டோர் மீது ஷோபனாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த கடலூர் போலீஸார், அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஷோபனாவின் திருமண வாழ்க்கைக்கு பிறகும், விஜயகுமாருடன் தொடர்பு வைத்திருந்ததோடு, ஷோபனாவின் மனதை குழப்பும் வகையில் பேசி தற்கொலைக்கு தூண்டியதாக அனு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஷோபனாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்