இந்த நேரத்தில் 'அலட்சியம்' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?-அமைச்சர் விஜயபாஸ்கர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இதுபோன்ற நேரத்தில் அலட்சியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர்,'' தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,109 பேருக்கு சோதனை மேற்கொண்டுள்ளோம். வழக்கத்தை விட இன்று தான் நாம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் இன்று 2 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்கள் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் அளவுக்கு நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. தமிழகத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அரசின் அலட்சியம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதற்கோ சமூகவலைதளங்களில் குதர்க்கமான அரசியல் செய்வதற்கோ நேரம் அல்ல.
மூத்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பது வருத்தமாக உள்ளது. தனக்கு கொரோனா இருப்பதை அறிந்ததும் அவர் தனியார் மருத்துவமனையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் மீண்டு வருவார் என நினைத்திருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து விட்டார். இதுபோன்ற சூழலில் அலட்சியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பதைபதைக்கும் வெயிலில்’.. ‘கைக்குழந்தையை’ தூக்கிக் கொண்டு 10 நாட்கள்..!’.. பெண் செய்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!
- 83 ஆயிரத்திற்கும் மேல் 'பாதிப்பு'... 5 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'தீவிர' பாதிப்பிலும் ஊரடங்கை 'தளர்த்தியுள்ள' நாடு... நிபுணர்கள் 'எச்சரிக்கை'...
- ‘இரவு, பகல் பாராமல்’... ‘கடைசி மூச்சு வரை செவிலியர் பணி’... ‘வெளியான உருக்கமான தகவல்’!
- ஊரடங்கிற்கு பின் 'பாதிப்பு' அதிகரித்தாலும்... 'இது' குறைவே... மத்திய அரசு வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
- ‘கொரோனா தொற்று’... ‘மிக மோசமான நிலையில் உள்ள நகரங்கள் இவைதான்’... ‘தீவிரமடையும் கட்டுப்பாடுகள்’!
- 'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’!
- தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா!.. 46 பேர் டிஸ்சார்ஜ்!.. முழு விவரம் உள்ளே!
- 'லாக்டவுன்' நேரத்திலும் 'வேலை பார்த்த'... 'பத்திரிகையாளர்கள்' 53 பேருக்கு 'கொரோனா...' பலருக்கு 'ரிசல்ட்' வர வேண்டியுள்ளதால்...'எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு...'
- கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!
- ‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!