‘ஆப் மூலம் பைக் புக் செய்து’... ‘காத்திருந்த ஐடி இளைஞருக்கு’... 'சென்னையில் நிகழ்ந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருசக்கர வாகனத்திற்கான ஆப் மூலம் வாடகைக்கு அழைத்த ஐடி நிறுவன ஊழியரை, காரில் ஏற்றி கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேகே நகரை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற இளைஞர், தாம்பரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, வடபழனி செல்வதற்காக ரேபிடோ செயலி மூலம், இருசக்கர வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் மழை அதிகமாக பெய்துக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த சிலர், ஸ்ரீகுமாரிடம் பேச்சு கொடுத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. காரில் இருந்த 3 பேர் திடீரென்று அவரை தாக்கியதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி 11 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், கால் சட்டையை கழற்றி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக ஸ்ரீகுமார், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சரவணன், மணிகண்டன் ஆகிய இளைஞர்களை கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் கண்ணு முன்னாடியே என் பையனுக்கு'...'எமனாக வந்த தண்ணீர் லாரி'... சென்னையில் நடந்த கொடூரம்!
- ‘100 ரூபாயை எடுக்கப்போய் 1 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்’.. சென்னையில் அரங்கேறிய நூதன கொள்ளை..!
- ‘சென்னை ஸ்டார் ஹோட்டலில்’.. ‘தவறி விழுந்த நண்பரை’.. ‘காப்பாற்ற முயற்சித்தவருக்கு நடந்த பயங்கரம்’..
- ‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!
- 'மின்சார ரயில் சேவையில் மாற்றம்'... 'சென்னை பயணிகள் கவனத்திற்கு'...!
- ‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘தகாத உறவுக்கு இடையூறு’.. ‘கணவனை மெரினாவுக்கு அழைத்து கொலை செய்த மனைவி’.. வெளியான அதிரடி தீர்ப்பு..!
- 'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு!
- ‘அம்மாவைக் கூட மம்மினு தான் சொல்றீங்க’.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு’.. ‘டீசர் வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் ஆதங்கம்’..
- ‘டிவிட்டரில் ட்ரெண்டாகும்..’ ‘#ISupportMaridhas VS #MentalMaridhas’.. ‘யார் இந்த மாரிதாஸ்..?’