VIDEO: மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. JUNK FOOD தான் காரணமா? வன ஆர்வலர் சாதிக் பேட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து நேற்று மரணம் அடைந்தது.
Also Read | 51 வருடத்திற்கு பிறகு கிடைத்த மகள்.. துடைக்கப்பட்டது தாய் மீது விழுந்த பழி... பதற வைக்கும் சதி அம்பலம்!!
கடந்த 1996ம் ஆண்டு இக்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது. அண்மை காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தது.
முன்னதாக லட்சுமி யானை வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுத்து வந்தது. இந்த ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்களும் யானையை பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்தன.
நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இந்த யானையின் மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என்று புதுச்சேரி வனத்துறை காப்பாளர் வஞ்சுளவள்ளி கூறியுள்ளார். மேலும் இது குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ள வன ஆர்வலர் சாதிக், யானையின் மரணத்திற்கு ஜங்க் உணவுகள் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "பக்தர்கள் வீட்டில் சமைத்து கொண்டு வந்து தரும் இட்லி, தோசை, சப்பாத்தி, பொரி உருண்டை போன்ற உணவுகள் தான் யானை நோய்வாய்ப்பட காரணம்." என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்