'முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி'... தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ஆனார் 'வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் 34 பேர் பொறுப்பேற்றுக்கொண்டனர். முதல் அமைச்சராகப் பதவியேற்றதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டம் உள்பட 5 முக்கிய திட்டங்களில்  ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் பல மாறுதல்கள் இருக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். உதயந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேரும் முதல்வரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைமைச் செயலாளர் பதவிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் பல துறைகளின் அதிகாரிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்