BGMA Ticket BGM Shortfilm 2019 Map Banner BGMA

'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி!

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, பல்வேறு புதிய திட்டங்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது மாற்றுத் திறனாளிகளையும் தனது உணவு டெலிவரி செய்யும் பார்ட்னர்களாக ஸ்விக்கி நியமித்துள்ளது.

 

மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்விக்கி டீஷர்ட் போட்டுக்கொண்டு, தனது மூன்று சக்கர வண்டியில் உணவு டெலிவரி செய்ய செல்வது போன்ற புகைப்படமொன்றை பதிவிட்ட ரீமா ராஜேஷ் என்னும் ஐபிஎஸ் அதிகாரி,''இயலாமையை விட திறமை பெரிது.கிரேட் ஜாப் ஸ்விக்கி,'' என வாழ்த்தி இருந்தார்.

 

இதற்கு ஸ்விக்கி நிறுவனம்,''அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வித்தியாசமான திறன் கொண்டவர்கள். வித்தியாசமானவர்கள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் அந்தவகையில் நாங்கள் அவர்களை எங்கள் திறமையான-சூப்பர்  பார்ட்னர்கள் என்று அழைக்க விரும்புகிறோம், அவர்கள் நம்மிடையே இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,'' என தெரிவித்துள்ளது. இந்த பதிவுக்கு பலரும் லைக் தெரிவித்து ஸ்விக்கிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

 

TWITTER, POLICE, SWIGGY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்