துபாய் EXPO-வில் முதல்வர் ஸ்டாலின்... முதல் வெளிநாட்டு பயணம் துபாய் மக்களிடம் பேசிய மாஸான பேச்சு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Dubai EXPO
துபாயில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் Dubai EXPO நடந்து வருகிறது. சுமார் 4.50 கிமீ சுற்றளவில் துபாய் மற்றும் அபுதாபி இடையே பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் இந்த EXPOவில் 192 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. சுமார் 1000 அரங்கங்கள் உள்ளன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். திரை பிரபலங்கள் பலர் தங்களது விடுமுறைக்காகவும், பட ப்ரோமோஷனுக்காகவும் அங்க சென்று வருகின்றனர்.
துபாயில் முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் Dubai EXPO-வில் உள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். முதல்வர் அவர்கள் துபாய் சென்றதன் முக்கிய நோக்கம் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுகோள் விடுக்கவே சென்றதாக கூறப்பட்டது.
முதல்வர் உரையும் கையெழுத்தான ஒப்பந்தமும்
இந்நிலையில் ஸ்டாலின் மற்றும் துபாய் அரசு அதிகாரிகள் முன்னிலையில், “தமிழ்நாடு – முதலீட்டாளர்களின் முதல் துறைமுகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டின் போது தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "துபாய் அழகான நகரம், அது அழகு மட்டுமல்ல, பெரிய வணிகங்கள் நடக்கும் இடமாகவும் மாறிவிட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால், இன்று அது அதிகரித்துவிட்டது, 2,217 அடி உயரமுள்ள புர்ஜ் கலீஃபா, வணிக வளாகங்கள் மற்றும் பாம் ஜுமைரா தீவுகள், வணிகத்தை மையமாக கொண்டு வலுவான வளர்ச்சியைக் கண்ட துபாயின் பிரபலமான சில அடையாளங்களை முதல்வர் பட்டியலிட்டார். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு தொழில் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், தமிழகத்துக்கும் துபாய்க்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்காக தான் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டதாக கூறினார். தமிழகத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்" என்று கூறிய அவர். மேலும் கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், தமிழ்நாடு 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது, இதன் மூலம் 8 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்து இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, என்றார்.
மேலும் துபாயில் உள்ள தமிழர்களிடம் உரையாற்றிய அவர், புலம்பெயர்ந்து வந்து தங்கள் உழைப்பினால் பொன்னான நாடாக மாற்றியுள்ளதாக கூறிய அவர், நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் வேராகிய தமிழகத்துடன் இணைந்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாடு முழுவதும் இந்த திட்டம் சட்டமாகணும்" திருமண விழாவில் விருப்பத்தை உடைத்து சொன்ன முதல்வர்..!
- VIDEO: முதல்வர் ஸ்டாலின் சென்ற சாலையில்.. டம்ளரை வீசிய டீ மாஸ்டர்.. பரபரப்பு வீடியோ..!
- "நான் ஏன் தமிழன்?"... முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க பேச்சு..!
- "பொண்ணுங்க மட்டும் ஏன் டிக்கெட் எடுக்கல".. "அட.. வேர்ல்டுல எங்கயும் இப்படி இல்ல".. ருமேனியர் எடுத்த பரபரப்பு முடிவு
- Breaking: கைது செய்யப்பட்ட ABVP நபர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட்..!
- தேர்தல் முடிந்ததும் செம்ம அறிவிப்பு காத்திருக்கு.. முதல்வர் ஸ்டாலினே சொன்ன விஷயம்!
- "உதயநிதியிடம் ஒரு ரகசியம் இருக்கு".. 1st time உதய் பற்றி இவ்ளோ பேசிருக்காரு EPS!
- நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
- பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்
- Rahul Gandhi: "வாழ்நாள் முழுசும் தமிழ்நாட்ட உங்களால ஆள முடியாது!".. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை வீச்சு!