'திமுதிமுவென வீடு புகுந்த கும்பல்'.. 'திரைப்பட பாணியில் காதல் தம்பதியருக்கு'.. 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல்லில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் அருகருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த விமல்ராஜூம் சேந்தமங்கலத்தை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த அனிதாவும் சாதிமாறி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு முன்பே, இவர்களின் சாதிமறுப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாகவும் ஆனாலும் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்ட இந்தத் தம்பதியர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தனர்.
அதன் பின்னர் நிம்மதியாக காமராஜர் நகரில், அனிதாவின் குடும்பத்தினருடன் அனிதாவும் விமல்ராஜூம் தங்களது 5 மாத குழந்தையுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு எழுந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அனிதா பலியானார். வெட்டுபட்ட விமல்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனிதாவின் தந்தை கருப்பசாமி சிகிச்சைக்காக போராடி வருகிறார்.
அனிதாவின் அண்ணன் அருணுக்கும் சேலத்தைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, நிக்கல்சன் அருணை வெட்ட ஆள் அனுப்பி, மாற்றி அனிதா-விமல்ராஜ் தம்பதியரை வெட்டியதாகவும்; அனிதாவின் சாதிமறுப்பு திருமணத்தில் உடன்பாடு இல்லாத அருணே கூலிப்படையை ஏவியிருக்கலாம் என்றும் வெவ்வேறு கோணங்களில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ட்ரான்ஸ்ஃபர் ஆனதும் மறந்துட்டாரு.. நீங்கதான் உதவணும்'.. இளம் பெண்ணுக்காக கலெக்டர் செய்த காரியம்!
- 'குத்துயிரும் குலையுயுருமாய் கர்ப்பிணி பெண்'.. பேஸ்புக் காதலனின் முடிவு.. பதறவைத்த சோக சம்பவம்!
- '4 மாச பேஸ்புக் நண்பர்கள்'.. எதேச்சையான முதல் சந்திப்பு.. '4 மணி நேரத்தில் நடந்த சுவாரஸ்யம்'!
- 'கல்யாணம்' ஆகலேன்னா 'தயவுசெஞ்சு' இத படிக்காதீங்க.. 'செம' காதல்.. 73 வயது 'தாத்தா'வை மணக்கும் இளம்பெண்!
- ‘திருமணத்திற்கு சம்மதிக்காத மைனர் பெண்ணிற்கு’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘இளைஞரால் நேர்ந்த பயங்கரம்’..
- 'அடுத்தநாள் கல்யாணத்த வெச்சுகிட்டு.. மாப்ள செய்ற வேலையா இது?'...'சிசிடிவியில் சிக்கிய பின்'.. 'மணமகள்' செய்த காரியம்!
- ‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..
- ‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..
- கல்யாணமான 15 -வது நாள் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 81 வயசு 'மணமகளை'.. திருமணம் செய்துகொண்ட.. '24 வயது மாப்பிள்ளை'.. 'வேற லெவல் காரணம்'!