'கொச்சையான கமெண்ட்கள், துரத்திய பழி சொல்'... 'நான் சாதிச்சிட்டேன்'... 'எங்க பரம்பரையில முதல் ஆள்'... ஜி.பி.முத்துவின் கண்ணீர் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'டிக்டாக் நண்பர்களே' என்ற வார்த்தையைக் கேட்டதும் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. ஜி.பி முத்து யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்று சொல்லும் அளவிற்கு டிக் - டாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகினார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதனைப் பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார்.

இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஜி.பி. முத்துவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தொடக்கத்தில் பொழுது போக்கிற்காக டிக் -டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த ஜி.பி முத்து, ஒரு கட்டத்தில் டிக் டாக்கிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்தித்த அவர், ஒரு முறை அவர் எடுத்த எதிர்பாராத முடிவு அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது.

பின்னர் அதிலிருந்து ஜி.பி முத்து மீண்டு வந்த நிலையில், டிக் டாக் தடை அவருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து ஜி பி முத்து இன்ஸ்டாகிராம் மற்றும் அவர் தனியாக ஆரம்பித்திருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோகளுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

யூடுயூப்பில் இவருக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான subscribers உள்ளனர். அதோடு அவருக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காண்பித்து அதனை வீடியோவாக வெளியிடுவதும் மிகவும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் ஜிபி முத்து தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்களிலும் தோன்றி தனது ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். இவர் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து second handed car ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என ஆனந்தக் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். பலகட்ட அவமானங்கள் மற்றும் பழிச் சொல்லைத் தாண்டி இன்று சாதித்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்