வெள்ளையாக வந்த குடிநீர்.. ‘யாரும் குடிக்காதீங்க’.. எச்சரிக்கை செய்த நபர்.. சோதனையில் வெளியான ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்டது பொன்னால்லகரம் கிராமம். இந்த கிராமத்துக்கு ஊராட்சி சார்பில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்திருந்துள்ளனர்.
அப்போது குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக வெள்ளையாக வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், உடனே ஊர்மக்களிடம் யாரும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.
இதனை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ததில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. இதுதொடர்பாக கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மனைவி சொந்தப் படம் எடுக்கனும்!”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை!
- 'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க!'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்!
- 'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...
- 'காணாமல் போன மளிகைக் கடைகாரர்!'.. 'கோவில் வளாகத்தில்' தோண்டியபோது தெரியவந்த 'ஷாக்'!.. 'ஜோதிடர்' செய்த குலைநடுங்கும் காரியம்!
- 'எதுவா இருந்தாலும் என் மச்சான் இருக்கானுங்க, அவங்க பாத்துப்பான்னு சொல்வானே'... கூடவே இருந்த நண்பர்கள் போட்ட கொடூர ஸ்கெட்ச்!
- கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி!
- 'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!
- “உன் புருஷனும் நானும் எவ்ளோ நெருக்கம் தெரியுமா?”.. ‘போட்டுக்கொடுத்த கள்ளக்காதலி!’.. மனைவியின் சோக முடிவு.. ஐடி கணவர் உட்பட 3 பேர் கைது!
- “உள்ள இழுத்து, கதவ சாத்திட்டு அடிடானு சொன்னாங்க!”.. “என் சாவுக்கு காரணமானவங்கள!”.. தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய உருக்கமான வீடியோவால் பரபரப்பு!
- அப்பாடா! 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு!