'திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப்'... 'மீட்க நடந்த போராட்டம்'... இளம் பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், இளம் பெண் அதிகாரி உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் வினோத் பாண்டியராஜ். இவர் மத்திய கலால்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சர்மிளா. இந்த தம்பதியருக்கு ரையனீஸ் என்ற 4 வயது மகன் இருக்கிறார். சர்மிளா அட்டப்பாடி வனச்சரகத்தில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே தினமும் வன பகுதியில் ரோந்து செல்லும் வழக்கம் கொண்ட சர்மிளா, தனது பணியை முடித்து கொண்டு முக்காலியில் இருந்து செம்மனூரில் உள்ள அலுவலகத்திற்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். ஜீப்பை உபைது என்பவர் ஓட்டி சென்றார். ஜீப் செம்மனூர் பவானி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தார்கள். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இருவரையும் வெளியே எடுக்க முயற்சி செய்தார்கள்.
டிரைவர் உபைது மீட்கப்பட்ட நிலையில், சர்மிளாவை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு சர்மிளா மீட்கப்பட்டு, மயக்க நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிரைவர் உபைது கடந்த 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீவிர சிகிச்சையில் இருந்த சர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இளம் அதிகாரி மற்றும் அவரது ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரள வனத்துறை அதிகரிகளுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐயப்பனை தரிசிக்க... பேருந்தில் சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள்... நடுவழியில் நடந்த பயங்கரம்... 18 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘ஏன் இந்தியாவுலயே வாழக்கூடாதுனு யோசிச்சோம்!’.. தடபுடலாக நடந்த தன்பாலின திருமணம்!.. வைரல் ஆகும் ஃபோட்டோஷூட்!
- 'போட்டி' தொடங்கிய 27-வது நிமிடத்தில்... கையைத் தூக்கியவாறு 'களத்திலேயே' சரிந்த வீரர்... நொடியில் நடந்த விபரீதம்!
- ‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி... நம்பி நாரயணணுக்கு... 1.3 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு... விவரம் உள்ளே!
- ‘ரெண்டு நாளாச்சு’!.. ‘விறகு எடுக்க போனவரு வீடு திரும்பல’.. காட்டுக்குள் முதியவருக்கு நடந்த கொடுமை..!
- 'ஷாக்' ரிப்போர்ட்... குழந்தைகளுக்கு எதிரான 'பாலியல்' குற்றங்கள்... 'முதலிடம்' பிடித்த தென் மாநிலங்கள்!
- விபத்தால் ‘மோதிக்கொண்ட’ ஓட்டுநர்கள்... ‘சமாதானம்’ செய்யச் சென்ற காவலருக்கு... அடுத்த ‘நொடி’ காத்திருந்த பயங்கரம்...
- 'ஃப்ரண்ட்ஸ்தான் காரணம்!'.. 'பெற்றோரை நடுநடுங்க வைத்த 10-ஆம் வகுப்பு மாணவன்'.. 'தந்தையின் பாராட்டுதலுக்குரிய முடிவு'!
- டெய்லியும் ஆட்டோவுல... ஸ்கூல் போறப்ப பயமா இருக்கு... ஹைகோர்ட் நீதிபதிக்கு... கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு சிறுவன்... !