'மதராஸி'ன்னு சொன்னாரு'...'இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை'... '6 வருஷத்துல' இல்லாத சரிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது எழுந்திருக்கும் சர்ச்சைகள், தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் உலகின் பல நாடுகளில் தனது கிளையை கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சி.இ.ஓ சலில் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ நிலஞ்சன் ராய் ஆகியோர் மீது எழுந்திருக்கும் குற்றசாட்டுகள் தான். இவர்கள் மீது குற்றசாட்டுகளை அளித்திருப்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்பது தான், இந்த பரபரப்பிற்கு முக்கிய காரணம்.
லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் இருவரும் இணைந்து, கணக்குவழக்குகளில் முறையற்ற வழிகளை கையாள்வதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். அதுகுறித்த ஆதாரங்களை அளிக்க தயாராக இருப்பதாகவும், முறையான விசாரணை மேற்கொள்ளபட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் ஊழியர்கள் அளித்துள்ள புகாரில், சில நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் தொடர்பான தகவல்களை தவறாகவும், திரித்தும், மறைத்தும் பங்குச் சந்தைகள் உள்ளிட்ட சட்டரீதியான அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் தலைமை அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த மோசடிகளை, ஆடிட்டர் குழுவுக்கும், இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும் கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும், ஊழியர்கள் தங்களது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே இந்த புகார் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகனி தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் சுயேச்சை இயக்குநர்களான சுந்தரம் மற்றும் பிரகலாத் ஆகியோரை, தமது உரையாடல்களில் மதராஸிகள் என சி.இ.ஓ சலில் பரேக் கூறியதாக பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் மற்றொரு சுயேச்சை இயக்குநர் கிரண் மஜூம்தார் ஷா-வை குறிப்பிட்டு பேசும்போது "பெரிய மகாராணி என நினைத்துக் கொள்பவர்" என கூறியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த புகார் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகனி தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் மீது சுற்றியிருக்கும் சர்ச்சைகளை தொடர்ந்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் 645 ரூபாய் நிலையை அடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் பங்குகளின் வர்த்தகம் 14.78 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த சரிவானது கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு நடப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்