Infinitheism Day: 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு வாக்கத்தான் நிகழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்ஃபினிதிஸம்  தினத்தை (Infinitheism Day) முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்ஃபினிதிஸம் எனும் கான்செப்ட் 2011ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி குரு மஹாத்ரியா அவர்களால் (Guru Mahatria) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் மக்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுடைய வாழ்க்கையை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே ஆகும். இந்நிலையில் அதன் 8ஆம் ஆண்டு நிறைவு தினம் கடந்த திங்கட்கிழமை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறப்பு வாக்கத்தானில் பொதுமக்கள், தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  இந்த வாக்கத்தானில் ஜெயின் கார்ஸைச் சேர்ந்த சுஷில் மேஹ்தா, வினிஷா விஷன் அட்வெர்டைசிங் ஏஜென்சியின் கே.வி.கதிரவன், நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸைச் சேர்ந்த சுனில் சங்க்லேசா, விபிசி ஜுவல்லரியின் பாலாஜி உம்மிடி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த  நிகழ்ச்சியில் அனைவரும் நீல நிற உடை அணிந்து வந்து குரு மஹாத்ரியா பற்றிய தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தொழிலதிபர்கள் இன்ஃபினிதிஸம் பற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. 11.11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ 11.11.19 அன்று இரவு 11.11 மணிக்கு வெளியிடப்பட்டது. அத்துடன் குரு மஹாத்ரியாவை கௌரவிக்கும் விதமாக ஒரு சிறப்பு ஆல்பமும் வெளியிடப்பட்டது.

CHENNAI, BESENTNAGAR, BEACH, WALKATHON, INFINITHEISM, GURU, MAHATRIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்