‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மார்ச் 24-ம் தேதி இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது வரை 485 ஆக உள்ளது. இதில், 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அதேசமயம் இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானயதை அடுத்து 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மார்ச் 24-ல் டெல்லியிலிருந்து காலை 3.05 மணிக்கு புறப்பட்டு (6 E – 2403) சென்னை வந்த இண்டிகோ விமான பயணிகளும், அதே தேதியில், இரவு 6.25 மணிக்கு ஏர் ஏசியா விமானத்தில் டெல்லியிலிருந்து (I5-765) சென்னை வந்த பயணிகளும் 28 நாள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும், மருத்துவ உதவி அல்லது வேறேதும் உதவிகள் உள்ளிட்டவை தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள் 044-25384520, 044-46122300.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்