‘விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த கமல்?’.. ‘கட்சியின் 3வது வருட விழாவில்’.. மநீம ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமலின் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, நேற்றிரவு  கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பலியாகிய சம்பவம் தமிழகத்தை அதிரவைத்தது.

இந்நிலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த நடிகர் கமல்ஹாசன் உயிரிழந்தவர்களின் இழப்பை தன் குடும்பத்தின் இழப்பாகக் கருதுவதாகக் கூறி, 1 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்ததோடு, ‘விழுந்த கிரேன் இரண்டு அடி தள்ளி விழுந்திருந்தால் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆள் பேசிக்கொண்டிருந்திருக்க கூடும்’ என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில்,‘நாளை (21/02/2020) அன்று நடைபெறும் நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுகளில் நமது தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள்

மட்டும் ரத்து செய்யப்படுகிறது’ என்று மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்