வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ந்த ரூபாய் மதிப்பு.. உச்சத்தில் தங்கம் விலை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமீப வாரங்களாக உலக அளவில் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமான நிலைமையை சந்தித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல், கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

Advertising
>
Advertising

சொக்கத் தங்கம்... இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்..!

இன்று மார்க்கெட் துவங்கிய உடனேயே கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் இறக்குமதி பாதிக்கப்படும் என்பதால் வரலாற்றின் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது இந்திய ரூபாய்.

வெள்ளி அன்று ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு  76.16 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மார்க்கெட் துவங்கிய போது  76.96 ரூபாய் என்ற நிலையை எட்டியது. இதுவே இதுவரையில் இந்திய ரூபாய் அடைந்த மிக மோசமான வீழ்ச்சியாகும்.

உச்சத்தில் எண்ணெய்

2008 ஆம் ஆண்டு உலக அளவில் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இப்போது மீண்டும் 6 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. இதனால், இந்திய பங்குச் சந்தை 2 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது. இன்று காலை சுமார் 1700 புள்ளிகள் சரிந்து மார்க்கெட் நடைபெற்று வருகிறது.

40 ஆயிரத்தை தாண்டிய தங்கம்

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதன் தாக்கம் தங்கம் விலையையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து சவரனுக்கு ரூ.680 விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 680 உயர்ந்து ரூ.40,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ 5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து ரூ 75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி, கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

"நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!

INDIAN RUPEE, CRUDE OIL PRICES SOAR, RUSSIA UKRAINE WAR, பொருளாதார நிலை, கச்சா எண்ணெய் விலை, தங்கம், வெள்ளி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்