தனுஷ்கோடியில் பரபரப்பு!.. இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் ஹோவர்கிராப்ட் கப்பலை நிறுத்தி வைத்து, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்து செல்வதோடு தங்ககட்டிகளும் ராமேசுவரம் கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தி கொண்டுவரப்படுகின்றன. ராமேசுவரம் கடல் பகுதியில் இருந்து கடல்அட்டை மற்றும் போதை பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதும் நடக்கிறது.
இந்த நிலையில் கொரோனாவால் இலங்கையிலும் அதிக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அகதிகள், கடத்தல்காரர்கள் போல ஊடுருவாமல் இருக்கவும் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கவும் கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் நிறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2011 WorldCup’ வெற்றி மேட்ச் பிக்சிங்கா?.. கொதித்த முன்னாள் கேப்டன்.. இலங்கை அரசு எடுத்த அதிரடி..!
- 'உங்கள புரிஞ்சிக்கல, சண்ட போட்டேன்'... 'ஆனா கடைசியா உங்க முகத்த பாக்க முடியலியே அப்பா'... மனதை நொறுக்கும் மகளின் பதிவு!
- 'உடல்நலக்' குறைவால்... இலங்கை அமைச்சர் 'மரணம்'!
- '90ஸ் கிட்ஸ் அலெர்ட்'...'கொரோனாக்கு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்கலாம்'... ஆனா இவ்வளவு 'ரூல்ஸ்' இருக்கு!
- 'எங்க நாட்டில் வந்து விளையாடுங்க’.... ‘ஐ.பி.எல். 2020 போட்டியை நடத்த’... ‘விருப்பம் தெரிவித்த பக்கத்து நாடு’... 'பிசிசிஐ உயர் அதிகாரியின் பதில்'!
- VIDEO : 'கப்பல்ல யாருக்கோ கொரோனாவாம்...' 'குதிச்சிடுறா கைப்புள்ள...' 'கரையை' அடைவதற்கு முன்னரே 'கடலில்' குதித்த 'பயணிகள்...'
- '9 வருஷம் ஆயிடுச்சு... இப்ப கூட அந்த மேட்ச் கண்ணுக்குள்ளயே இருக்கு!'... ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த... 2011 உலகக் கோப்பை ஃபைனல்... ஒரு குட்டி ரீ-வைண்ட்!
- 'நாங்க கடலிலேயே தங்கிக்குறோம்...' 'ஊரடங்கெல்லாம் முடியட்டும், அப்புறம் வரோம்...' நடுக்கடலில் ஆராய்ச்சி செய்ய சென்ற விஞ்ஞானிகள் அறிவிப்பு...!
- லண்டன் சென்று திரும்பிய நிலையில்... கொரோனா அச்சுறுத்தலால்... தனிமைப்படுத்திக் கொண்ட இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா!
- 'வேகமாக' பரவும் 'கொரோனா' தொற்று... '2 வாரங்களில்' 20 ஆயிரமாக 'அதிகரிக்கக்' கூடும்... 'இலங்கைக்கு' மருத்தவ 'நிபுணர்கள்' எச்சரிக்கை...