‘நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான’... ‘வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்’... ‘சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை , அவருக்கு ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில், 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது இல்லை எனவும், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வருமான வரித் துறை சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து வருமானவரி துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ரஜினிக்கு எழுதிக் கொடுத்து பேச வெச்சுருக்காங்க..”.. “ஒரே கல்லுல 2 மாங்கா!”.. அமீர் பரபரப்பு பேட்டி!
- ‘பிரதமர்’ மோடியைத் தொடர்ந்து... உலகின் ‘பிரபலமான’ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ‘ரஜினிகாந்த்’...
- 'ரஜினி' சென்ற விமானத்தில் 'கோளாறு'... உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து 'தவிர்ப்பு'...
- “அடுத்த அதிரடி உத்தரவு!”.. “சோஷியல் மீடியாவில் இத பண்றவங்க லிஸ்டை உடனே ரெடி பண்ணுங்க!”
- ரஜினிகாந்துக்கு ஜென்ம சனி தொடக்கம்... அரசியலில் அவரது நிலை என்ன?... ஜோதிடர்கள் கணிப்பு...
- "நான் பேசுனா எரியுதா... அப்படித்தான்யா பேசுவேன்... ஸ்டைலா... கெத்தா...கால் மேல கால்போட்டு... எட்றா வண்டிய கோட்டைக்கு..." 'ரஜினி' கிரீன் சிக்னல் டூ பாலிடிக்ஸ்...
- "பெரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்..." "இல்லை ரஜினியைத் தான் கண்டிக்கிறோம்..." போலீசைப் பார்த்ததும் உளறிய போராளிகள்...
- “பணிஞ்சு போகாதீங்க!”... “ராமருக்காக பேசாம.. வேற யாருக்காக பேசறது?”.. ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல பெண் செய்தி வாசிப்பாளர்!
- 'ரஜினியின் பெரியார் கருத்து'... 'ஆதரிப்பவர்கள் யார்?'... 'எதிர்ப்பவர்கள் யார்?'....
- ரஜினிகாந்த் சொன்னது உண்மையா?... 1971ல் நடந்தது என்ன?... அன்றைய செய்தித் தாள்களின் நேரடி ரிப்போர்ட்...