வருமான வரித்துறை 'அதிகாரிகளின்' வரம்புகள் என்ன?... எங்கெல்லாம் 'சோதனை' நடத்தலாம்?... விரிவான விளக்கம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வருமான வரித்துறை அதிகாரிகள் ஒருவரை சோதனை செய்யும்போது என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?, அவர்களின் வரம்புகள் என்ன? என்பதை இங்கே விரிவாக காணலாம்.

அடிக்கடி வருமான வரித்துறை திடீர் சோதனை, மாறுவேடத்தில் 32 இடங்களில் சோதனை போன்றவற்றைநீஙகள் அடிக்கடி செய்திகளில் பார்த்திருக்க கூடும். நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அதேபோல கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், பயிற்சி மையங்கள்  என அனைத்து இடங்களிலும் இந்த வருமான வரி சோதனையை அவ்வப்போது மத்திய அரசு நடத்துகிறது.

இந்த சோதனைகளை கீழ்க்கண்ட  தகவல்கள் அடிப்படையிலேயே வருமான வரித்துறை மேற்கொள்கிறது:-

1. வருமானவரித்துறை சட்டம் பிரிவு 132(1), முதன்மை ஆணையர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியின் உத்தரவின் பேரில், வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும். வருமானத்தை குறைத்து காட்டியது தொடர்பான ஆவணங்களோ அல்லது பொருட்களோ இருக்கும் என்று கருதக்கூடிய எத்தகைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம்.

2. வருமானத்திற்கு அதிகமாக ஆடம்பர செலவுகளை ஒருவர் மேற்கொண்டாலோ, போலி ஆவணங்களை காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தாலோ வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ளலாம்.

3. சோதனை நடத்தும்போது பெட்டகம் அல்லது வீட்டு அறைகளின் சாவி இல்லையென்று உறுதியானால் அதை உடைக்கும் அதிகாரம் உண்டு. சோதனையின் போது ஆவணங்களின் நகலை எடுத்துக்கொள்ளவும், ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளது. பறிமுதல் செய்யப்ப்டட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை சோதனை செய்யும் அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.

4. சோதனைக்கு உள்ளாகும் நபர் குழந்தைகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்பவும், மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை பெற்றுக்கொள்ளவும் செய்யலாம். கைப்பற்றப்படும் பொருட்கள் குறித்த விளக்கத்தினை, அதுகுறித்த பட்டியலையும் அதிகாரிகள் வழங்க வேண்டும். அது மட்டுமின்றி அவர் தனது பகுதியில் வசிக்கும் இருவரை பொதுவான சாட்சியாக வைத்துக் கொள்ளலாம்.

5. வரி ஏய்ப்பு குறித்து நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ள முடியும். அல்லது அரசு துறைகளில் இருந்தோ, நுண்ணறிவு பிரிவில் இருந்தோ பெறப்படும் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளலாம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்