மகன் இறந்த தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் தந்தை.. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக EVKS இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தனது 46 வயதில் உயிரிழந்தார்.
இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
திருமகன் ஈவெராவின் இயற்பெயர் ராம். இவர் பெரியாரின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். அந்த வகையில் திருமகன் ஈவெரா பெரியாரின் கொள்ளுப் பேரன் ஆவார்.
இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவர். மேலும் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தவர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.
திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மகன் இறந்த பிறகு நடக்கும் இடைத் தேர்தலில் தந்தை போட்டியிட உள்ளது பலரது கவனத்தை ஈரோடு கிழக்கு தொகுதியின் மீது குவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!
- மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம்.. நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கமான ட்வீட்..!
- "ஒரு பெண்ணை அவமதிக்கிறார்கள்".. நடிகை குஷ்புவின் ட்வீட்.. வருத்தம் தெரிவித்த MP கனிமொழி.. முழு விவரம்..!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!
- நிறைவேறிய நரிக்குறவர் மக்களின் பலவருட கனவு - முதல்வருடன் தேநீர் சந்திப்பில் நன்றி கூறி நெகிழ்ச்சி.!
- "குழந்தைங்க பசியோட இருக்க கூடாது".. "தாயுள்ளத்தோட".. பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. உதயநிதி போட்ட ட்வீட்!!
- 1 ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஏழை எளியவர்களுக்கு 15 வருஷமா சேவை செய்யும் தம்பதி.. முதலமைச்சரின் உருக்கமான பதிவு..!
- உடனடியா அந்த பட்டியலை ரெடி பண்ணுங்க.. 15 நாள் டைம்.. MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.. முழுவிபரம்.!
- "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!
- "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!