திடீர்னு கிணத்துக்குள்ள இருந்து 'டமார்'ன்னு ஒரு சவுண்ட், போய் பார்த்தா...! 'கணவனோடு சண்டைப் போட்டுக்கொண்டு...' அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி சுப்ரமணியபுரம் கோனார் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(35), தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி மைதிலி(30). இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் சந்தோஷ்குமார் வெளியூரில் தங்கியிருந்து பணிபுரிவதால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து மனைவி மகளுடன் இருந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மனைவியிடம் போனில் பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை கோவத்தில் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்த மைதிலி, நேற்று அதிகாலையில் 9 மாத கைக்குழந்தையுடன் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் குதித்தார். அதிகாலை நேரம் திடீரென கிணற்றில் பயங்கர சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் கண் விழித்தனர். மேலும், பெண் மற்றும் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் ஓடி வந்து கிணற்றில் டார்ச் லைட் அடித்து பார்த்தனர். அப்போது இருவரும் கிணற்றில் தண்ணீரில் தத்தளிப்பது தெரிந்தது. இது குறித்து உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மில்கியூராஜா தலைமையில் இஆர்டி எனப்படும் சிறப்புக் குழு கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு கட்டி 35 அடி கிணற்றில் இறங்கி 5 அடி ஆழமுள்ள நீரில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும், குழந்தையையும் கயிறு கட்டி மீட்டனர். மேலும் கிணற்றுக்கு அருகே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்சில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்து தாயையும் குழந்தையையும் மீட்ட தீயணைப்புத்துறையினர், மற்றும் 108 ஆம்புலன்ஸை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். எதற்காக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து மைதிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆடு மேய்க்க தங்கச்சி கூட போன பொண்ணு'... 'இந்த கோலத்துலயா பாக்கணும்'... 'தமிழகத்தை' உலுக்கியுள்ள சம்பவம்!
- ‘தாறுமாறாக’ ஓடிய அரசுப்பேருந்து... ‘மோதிய’ வேகத்தில்... ஆட்டோவுடன் ‘கிணற்றுக்குள்’ தலைகீழாக விழுந்து கோர விபத்து... ‘20 பேர்’ பலியான சோகம்...
- "மாப்ள செவ்வாய் கிரகத்துக்கு எந்த வழியா போகனும்..." குடிகாரர்கள் சென்ற வழியில் மொட்டைக் கிணறு... சொர்க்கத்துக்கே வழிகாட்டிய எமன்...
- பெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்!
- '100 அடி ஆழம்'... 'கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை!'... 'என்ன நடந்தது?'... 'புதுக்கோட்டையில் பரபரப்பு'...
- கிணற்றுக்குள்ள வந்து பார்த்தபோது...’ காணவில்லை எனத் தேடிய சிறுமியின் நிலை... கலங்க வைக்கும் சம்பவம்...!
- கை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- ‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...
- ‘சல்யூட் தலைவா’!.. ‘கிணற்றில் மிதந்த விஷப்பாம்பு’.. மயிலை மீட்க உயிரை பணயம் வச்ச இளைஞர்..!
- ‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..