பட்டினியால் இறப்பதைவிட சொந்த ஊருக்கே போறோம்... கோயம்பேட்டை மிஞ்சி... டெல்லி பேருந்து நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்கள்... அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொந்த ஊருக்கு செல்வதற்காக டெல்லி பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக முண்டியடித்த காட்சி நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, Social Distancing எனப்படும் சமூக விலகுதலை கடைபிடிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பொது இடங்களில் கூடக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு கூடினாலும், ஒருவருக்கொருவர் குறைந்தது 3 அடி இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும் என்று கூறி, 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் டெல்லியில் வேலை செய்து வந்த உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி நடைபயணமாக செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியிலிருந்து லக்னோ வரை 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட தொழிலாளர்கள் நடந்து சென்ற நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, எல்லாருக்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது அதில் தங்கி கொள்ளலாம் என்று வலியுறுத்தி இருந்தார்.

எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய ஊருக்கு சென்று கொண்டே இருந்தனர். இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களது வேலையை இழந்தவர்கள். அவர்களிடம் காசு பணம் இல்லாத நிலையில், உத்திரப்பிரதேச சார்பில் டெல்லியில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதனால் இன்று முதல் டெல்லியில் இருந்து கான்பூர், வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்க படுகின்றது. இதனையறிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்வதற்காக டெல்லியில் உள்ள அனந்த விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு அலை அலையாக வந்த வண்ணம் இருக்கிறார்கள். 

சமூக பரவல் குறித்த அச்சமோ , விழிப்புணர்வோ இன்றி, லட்சக்கணக்கானோர் குவிந்ததால் சமூக தொற்று என்ற 3ஆம் நிலை அபாயத்தை இந்தியா நெருங்குவதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CORONAVIRUS, CORONA, TERMINUS, BUS, ANAND VIHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்