இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 

1,இந்தியா - இலங்கை இடையேயான முதலாவது ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

2,ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், சென்னை அணி இன்று, ஒடிசா அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், கேரள அணி, 5-1 என்ற கோல்கணக்கில் ஹைதராபாத் அணியை வென்றது.

3,மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா – காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அதிகாரத்தை மட்டுமே நோக்கமாக் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  குற்றம்சாட்டியுள்ளார்.

4,15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றிய நிலையில், ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

5,டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து,  டெல்லி  காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

6,குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வீடு வீடாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாழு தழுவிய இயக்கத்தை பிஜேபி தொடங்கியது.

7, ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 ரூபாய் அதிகரித்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.31,168க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

8, டெல்லி சட்ட சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், வேட்பு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11ம் தேதி எண்ணப்படும் என்றும், வேட்பு மனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் தெரிவித்துள்ளார். 

MKSTALIN, ASSEMBLY, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்