இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய முக்கிய செய்திகள் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:

1. சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் இந்தியா வருகை தர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில், ரூ.1கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

3. இந்திய துணை கண்டத்திற்கான அல்-கொய்தா தலைவர் ஆசிம் உமர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

4. சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. பிரான்ஸிடம் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.

6. தமிழகத்தில் மதுரை, தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7. டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவணன் சிலை மீது அம்பு விட்டார்.

8. தேர்தல் பயத்தால் தான் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

9. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழாவை ஒட்டி நேற்று சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

10. அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மாற்றப்பட்டு டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் ஆட்சியர் வினய் மதுரை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்