‘அடுத்த 3 நாட்களுக்கு மழை’.. சென்னைக்கு வாய்ப்பு இருக்கா.? வானிலை மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்தில் ‘மழை’.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'வலுவிழந்த புயல்'... 'ஆனாலும் தமிழகத்தில் புரட்டி எடுக்கும் மழை'... என்ன காரணம்?
- 'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
- ‘தலைக்கு தில்ல பாத்தியா’!.. சோப்பு போட்டு ஆனந்த குளியல்.. விட்டா ‘உள்நீச்சல்’ அடிப்பாரு போல.. ‘செம’ வைரல்..!
- 'வலுவிழந்த பின்பும்.. ஒரே இடத்தில் நின்று நகர மறுத்து.. ஆட்டம் காட்டும் புரெவி'... பிச்சு எடுக்கும் கனமழை!
- ‘அடுத்த 6 மணிநேரத்துக்கு கனமழை’.. வலுவிழந்த ‘புரெவி’ புயல்.. வானிலை மையம் முக்கிய தகவல்..!
- திரிகோணமலையில் கரையைக் கடந்தது! பாம்பனை நெருங்கும் புரெவி... காலை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை!
- புரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்!'...
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 3 மாவட்டங்களுக்கு ‘புயல்’ எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!