"டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

Advertising
>
Advertising

பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்காக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் நரேந்திர மோடி. இந்நிலையில் இன்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக திண்டுக்கல் வந்தடைந்தார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றிருக்கிறார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருப்பதாக பல்கலை நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், விழாவில் கலந்துகொண்ட மோடி, டாக்டர் பட்டத்தை இளையராஜாவிற்கு வழங்கினார்.

பிரதமர் மோடியின் வருகையால் திண்டுக்கல், காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகியவை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

PM MODI, ILAIYARAAJA, DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்