‘100% அனுமதி திரும்ப பெறப்பட்டால் அவர் படம் மட்டும்தான் வெளியிடப்படும்’?.. திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு தகவல்..!?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக அரவிந்த்சுவாமி, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற திரையினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் வர அனுமதித்தற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதற்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

100 சதவீத ரசிகர்கள் அனுமதியை அரசு திரும்பப் பெற்றால், நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமே தியேட்டர்களில் வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் திரையரங்குகளில் இருக்கைகளின் அளவு குறைக்கப்பட்டால் மாஸ்டர் படத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என தான் கூறியதாக வெளியான தகவல் தவறானது என திருப்பூர் சுப்பிரமணியம் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்