30 வருஷமா 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் தமிழகத்தை சேர்ந்த பாட்டி.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு.. கொண்டாடித்தீர்த்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை சேர்ந்த செல்லாத்தாள் என்ற மூதாட்டிக்கு இந்திய பணக்கார்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா அன்னையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இட்லி அம்மா

கோவை மாவட்டம் வடிவேலாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்தப் பகுதியில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக 1 ரூபாய்க்கு இட்லி சமைத்து விற்பனை செய்துவருகிறார். இதனால் இப்பகுதி மக்கள் இவரை இட்லி அம்மா என்று அன்போடு அழைக்கின்றனர். இவருடைய சேவையை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு கேஸ் இணைப்பை வழங்கினார் ஆனந்த் மஹிந்திரா.

சின்னஞ்சிறிய இடத்தில் வாழ்ந்து தனது சமையல் வேலைகளை கவனித்துவந்த இட்லி அம்மாவுக்கு மேலும் உதவி செய்ய மஹிந்திரா குழுமம் நினைத்தது. அதன் பலனாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இடம் ஒன்றை வாங்கி இட்லி அம்மாவுக்காக வீடு கட்டும் பணியில் இறங்கியது இந்த குழுமம்.

புது வீடு

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு துவங்கிய கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்ததை முன்னிட்டு, அன்னையர் தினமான நேற்று இட்லி அம்மாவுக்கு இந்த வீட்டினை பரிசாக அளித்திருக்கிறது மஹிந்திரா குழுமம். வீட்டோடு இணைந்த பகுதியில், இட்லி அம்மா தனது சமையல் பணிகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

செல்லாத்தாள் பாட்டிக்கு வீட்டினை வழங்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மஹிந்திரா,"அன்னையர் தினத்தன்று இட்லி அம்மாவுக்கு பரிசளிப்பதற்கு சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக எங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தாயின் நற்பண்புகளான வளர்ப்பு, அக்கறை மற்றும் தன்னலமற்ற குணம் ஆகியவற்றை கொண்டவர். அவரையும் அவருடைய பணியையும் ஆதரிக்க எங்களுக்கு கிடைத்த பாக்கியம் இது. உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களாக பல்வேறு மக்களின் பசியை போக்கிவந்த இட்லி அம்மாவுக்கு புது வீட்டை ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது குழுமம் கட்டிக்கொடுத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ANANDMAHINDRA, IDLYAMMA, NEWHOUSE, ஆனந்த்மஹிந்திரா, இட்லிஅம்மா, புதுவீடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்