இறக்குமதி மீது 10% தீர்வு!.. “செல்போன் விலையில் இந்த மாற்றம் நிகழ போகுதா?” - வெளியாகும் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மொபைல் போன்களின் டிஸ்ப்ளே இறக்குமதி மீது மத்திய அரசு 10% தீர்வை விதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஸ்பிளே அசெம்ப்ளி மற்றும் டச் பேனல் மீதான10% தீர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக தவல்கள் வெளியானதை அடுத்து, இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுக் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மொஹீந்த்ரூ இதுபற்றி கூறும்போது “இதனால் மொபைல் போன்களின் விலை 1.5% முதல் 3% வரை அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஆப்பிள், ஹூவேய், ஷியோமி, விவோ, வின்ஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கூட்டமைப்பில் உள்ளன. அரசு தரப்பில் இதுபற்றி, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே டிஸ்ப்ளே டச் பேனல் உற்பத்திக்கு வழிவகை செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசியவர், கொரோனா வைரஸ் மற்றும் தேசிய பசுமைத்தீர்ப்பாய தடைகளினால் டிஸ்ப்ளே அசெம்ப்ளி உற்பத்தி முடங்கியதாகவும், ஆனால் துணை அசெம்பளிகள், மற்றும் உதிரிபாகங்களை இங்கேயே உற்பத்தி செய்வதில் முனைப்பாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2016-ல் வேதாந்தா குழும சேர்மன் அனில் அகர்வாலின், வோல்கன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் ட்வின்ஸ்டார் டிஸ்ப்ளே என்ற டிஸ்பிளே உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்க கோரிக்கை வைத்தபோது அனுமதி அளிக்கப்படாததால், இத்திட்ட நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் 10% தீர்வை டிஸ்ப்ளே அசெம்ப்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு விதிப்பதால் செல்போன்கள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்!'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!!...
- 'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!'...
- “கொரோனா உயிரிழப்பு தகவல்” மற்றும் “புவி வெப்பம் அடைதல்”.. இரண்டு விவகாரங்களில் இந்தியாவை கடுமையாக ‘சாடிய’ டிரம்ப்!.. அப்படி என்ன சொன்னார்?
- 'கொரோனாவை தொடர்ந்து'... 'சீனாவிலிருந்து பரவும் புதிய வைரஸ்'... 'பாதிப்பு அபாயத்தில் உள்ள இந்தியா'... 'ICMR எச்சரிக்கை!'...
- '1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவிப்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்!!!'...
- "6 நாளில்.. 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி!".. கொரோனாவால் மளமளவென சரிந்த முதலீடுகள்!!.. பெரும் சிக்கலில் முதலீட்டாளர்கள்!
- 'IT ஊழியர்களுக்கு இது செம சான்ஸ்!'... 'அடுத்தடுத்து பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள'... 'அசத்தல் அறிவிப்புகள்!!!'...
- நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் எல்லாம் இனி ‘இலவசமா’ பாருங்க.. அசத்தல் ‘ஆஃபரை’ அறிவித்த ஜியோ..!
- "எல்லா டீம்லேயும் அவர கூப்பிடறாங்க... ஆனா, இந்த டீம் மட்டும் அவர கண்டுக்கவே மாட்டேங்கறாங்க!"... - இளம் வீரருக்கு ஆதரவாக கோபத்தில் கொதிச்ச பிரபல வீரர்!!!
- 'முதல் தடுப்பூசி இதுவாதான் இருக்கும்'... 'அதுவும் நவம்பர்லையே'... 'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள ஹேப்பி நியூஸ்!'...