IAS, IFS சிவில் சர்வீஸ் தேர்வுகள்.. வீரர்களே தயாராகுங்கள்! வந்தாச்சு அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணியிடங்களுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரிளிமினரி அல்லது முதல்நிலை தேர்வுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  கடந்த ஆண்டுடோடு  ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். 2021-ல் 712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன.

பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் upsc.gov.in அல்லது https://upsconline.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 22 இந்திய குடிமை பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு  ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டன.

எனவே, யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கொரோனா பரவல  தீவிரமாக உள்ளதால் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெறவிருந்த முதல்நிலை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடத்தப்படும்' என்று தெரிவித்திருந்தது. அதேபோன்று   2020 ஆண்டும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு மே மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் 4ம் தேதி நடத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக 2021 ஆண்டும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்றது. அதேநிலை இந்த ஆண்டும் நீடித்தல் தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2020ம் ஆண்டு தேர்வு தள்ளிப்போனதால் நேர்காணல் காலதாமதமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நேர்காணல் கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

UPSC, EXAM, CIVIL SERVICE, DATE ANNOUNCE, CENTRAL GOVT, JUNE 5

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்