“பின் நம்பர் சொல்லுங்க.. கார்ட பத்திரமா வெச்சுக்கங்க..”.. “நபர் செய்த அதிர்ச்சி காரியம்!”.. வைரல் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கத் தெரியாதவர்களுக்கு உதவுவதாகக் கூறி நபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் சிசிடிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஏடிஎம் ஒன்றுக்கு, பணம் எடுக்கத் தெரியாத பலரும் வந்துள்ளனர். அவர்களைக் குறி வைத்து வந்த நபர்,  ஒருவர் அங்கு வந்து அவர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டை பெற்றுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் அந்த ஏடிஎம் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும் உதவுவதாகக் கூறி கேட்டு தெரிந்துகொண்டு பணம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

பரிவர்த்தனை முடிந்ததும் அவர்களின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக, தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த போலி கார்டை தந்து ஏமாற்றியதோடு, அவர்களின் உண்மையான ஏடிஎம் கார்டுகளை வைத்து பணம் எடுத்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தர்மபுரி மாவட்டம் செட்ரப்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர்தான் இந்த வேலையைச் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.  அவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணம் மற்றும் அவர் வைத்திருந்த, போலி ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

KRISHNAGIRI, ATM, CHEAT, FRAUD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்