Video: விழித்துக் கொள்ளுங்கள்.. இந்துக்களுக்காக குரல் கொடுக்க என் வாய் உள்ளது.. நித்யானந்தா பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா கைலாஷா எனும் நாட்டில் இருப்பதாக தெரிவித்து வருகிறார். அந்நாட்டின் அதிபரும் தான்தான் என்றும், இந்து தர்மத்தையும் இந்து மதத்தையும் காப்பதற்காக அந்த நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. சமீபத்தில் சிவராத்திரியை முன்னிடடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய கெட்டப்புகளில் தோன்றி  அவர் நடத்திய போட்டோ சூட் பேஸ்புக்கில் பகிர்ந்தார். அது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Advertising
>
Advertising

கைலாசா அதிபர்

கைலாசா நாட்டிற்காக கரன்சியையும் அவர் வெளியிட்டார். தொழில் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்தார். தான் தனித்து இந்த கைலாசாவில் இருக்கும் போது தன்னை ஏளனமாக பேசியவர்கள் இன்று கொரோனாவால் அனைவரையும் தனித்து இருக்குமாறு அரசாங்கமே சொல்கிறது என கிண்டல் செய்தார்.  இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளை  செய்துவரும் நித்தியானந்தா பேசி வெளியிட்டு வரும் வீடியோக்கள் பேசுபொருளாக மாறி வருகிறது. பலர் அதனை நகைசசுவையாக பார்த்து சிரிக்கின்றனர்.  பலர் அவர் கூறும் கருத்துக்களை ஆமோதித்து வருகின்றனர்.

மதுரை ஆதினம் நான்தான்

அண்மையில் மதுரையின் புதிய ஆதீனம் நான்தான் என்றும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று கூறிய அவர், "மதுரை ஆதீனம் இறந்ததற்கு கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆதீனத்தை அடக்கம் செய்யும் வரை கைலாசா நாட்டு மக்கள் உணவருந்த கூடாது" என விதிகளை பிறப்பித்தார். மேலும் குழந்தைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு என்று அறிவித்தார்.  இந்நிலையில், நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்து மக்களுக்காக குரல் கொடுப்பேன்

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "இந்துக்கள் எல்லாருக்கும் கைலாசாவில் இடம் கொடுக்கும் அளவிற்கு நான் பெரிய நாடாக இல்லாமல் இருக்கலாம். நான் அவ்வளவு பெரிய மனிதராக இல்லாமல் போகலாம். ஆனால் உங்கள் எல்லோருக்கும் குரல் கொடுக்கும் அளவிற்கு என்னால் முடியும். உங்களை விழித்துக்கொள்ள வைப்பதற்கும் குரல் கொடுப்பேன். உங்களுக்காகவும் உலகம் முழுவதும் குரல் கொடுப்பேன். உங்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதி எதுவாக இருந்தாலும், அதிலுருந்து காத்துகொள்ள; உங்களை விழித்துகொள்ள வேண்டி உங்களுக்கும் குரல் கொடுப்பேன். உலகம் முழுவதும் கேட்குற மாதிரி குரல் கொடுப்பேன்" என்று கூறுகிறார்.

இன்றைய தலைமுறையை வசீகரிக்கும் பேச்சுக்களால் நகைச்சுவை ஆற்றலோடு ஈர்த்து வரும் நித்தியானந்தா தற்போது பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக "கைலாசா நாட்டில் உள்ள சாதிக் கட்டமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும், மனிதச் சமூகம் சிறப்பதற்காகவே இந்த சாதியக்கட்டமைப்பை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NITHYANANDA ISLAND, NITHYANANDA VIDEO VIRAL, HINDU PEOPLE, NITHYANANDA SPEECH, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்