"சின்ன வயசுலேர்ந்து கனவு" - தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குறித்த உருக்கமான தகவல்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதனிடையே மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இன்று காலை பயங்கரவாதிகள் இந்த முகாமை தாக்கிய நிலையில் இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரைபில் மேன் லட்சுமணன் மற்றும் பேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார் ஆகிய 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக வீரர்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மூன்று பேரில் ஒருவரான லட்சுமணன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தாக்குதலில் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இன்று லட்சுமணனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த லட்சுமணனின் பெற்றோர் தர்மராஜ் - ஆண்டாள் ஆவர். பிபிஏ முடித்த லட்சுமணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். இரட்டை சகோதரர்களான லட்சுமணன் - ராமன் இருவருக்குமே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே கனவாக இருந்திருக்கிறது. இதில் லட்சுமணனுக்கு வாய்ப்பு கிடைக்கவே அவர் முதலில் பணியில் சேர்ந்திருக்கிறார். இவர்களில் மூத்தவரான ராமன் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வருகிறார்.
உருக்கம்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்ற லட்சுமணன். நேற்று முன்தினம் தனது தாயுடன் போனில் பேசியிருக்கிறார். இதனிடையே தீவிரவாத தாக்குதலில் லட்சுமணன் உயிரிழக்கவே அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய லட்சுமணனின் தந்தை தர்மராஜ்," என்னுடைய இரண்டு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க நினைத்தேன். சிறுவயது முதலே அவர்களது கனவாகவும் அது இருந்தது. முதலில் லட்சுமணனுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. அவரால் முழுமையாக பணிபுரிய முடியாமல் போனாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய மூத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன். லட்சுமணன் விட்டுச் சென்ற பணியை ராமன் நிறைவு செய்வான்" என்றார் உருக்கமாக.
வீரமரணம் அடைந்த லட்சுமணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. நிதியை வழங்க மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் இன்று புதுப்பட்டிக்கு செல்ல இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்.. முதல்வர் வெளியிட்ட உருக்கமான இரங்கல் பதிவு..!
- ராணுவ பயிற்சி முடிந்ததும்.. பயத்தில் இருந்த இளைஞர்.. விபரீத முடிவு நேர்ந்த அடுத்த நாளே பணியில் சேர வந்த 'ஆர்டர்'!!
- "நெட்டிசன்களை நெகிழ வச்ச தாய் மற்றும் மகன்".. ராணுவ அதிகாரி பகிர்ந்த Viral புகைப்படம்..!
- ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமி.. MP பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
- அறிவிக்கப்பட்டது ‘அக்னிபாத் திட்டம்’.. வெடித்தது கலவரம்.. பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்.! இணைய சேவைகள் முடக்கம்.!
- சூப்பர்மேனா இருப்பாரோ.. 50 மணி நேரத்துல 350 கிமீ.. இணையத்தை தெறிக்கவிட்ட இளைஞர்..வைரல் வீடியோ..!
- "சரணடையணுமா.. அப்படி ஓரமா போயி..".. ரஷ்ய ராணுவத்தை சிங்கிளாக எதிர்த்த உக்ரைன் வீரர்.. அரசு கொடுத்த கவுரவம்.!
- மனிதம் இன்னும் சாகல.. உக்ரைன் மக்கள் செஞ்ச காரியம்.. கண்ணீர் விட்டு அழுத ரஷ்ய வீரர்..!
- "சுத்தி வளச்சிட்டாங்க சார்.. என்ன பண்றது".. உக்ரைன் வீரரின் கேள்விக்கு கேப்டன் சொன்ன பதில்.. உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ..!
- தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாப்பிற்காக.. இஸ்ரேல் தயாரித்துள்ள அதிநவீன `எக்ஸ் 95’ துப்பாக்கி.. என்ன ஸ்பெஷல்?