Video: "இதுக்காகவே விஜய் Sir மாஸ்டர் கதையை Reject பண்ணிடுவாருனு நெனச்சேன்!" - மனம் திறக்கும் இயக்குநர் லோகேஷ்! Exclusive Interview

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

Behindwoods TV யூடியூப் சேனலின் Fatmans Guest நிகழ்ச்சியில் ரவீந்தரின் கேள்விகளுக்கு பிரத்தியேக பேட்டியில் தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனராஜ் மனம் திறந்து கூறியிருப்பதாவது:

"தளபதி விஜயிடம் மாஸ்டர் பட கதையை கூறிவிட்டு, எல்லாம் கேட்டு முடிந்த பிறகு அவர் மீசையை எடுக்க வேண்டும் என்கிற போர்ஷன் கதையில் இருப்பது பற்றியும் பேசினோம். ஆனால் முதலில் இதுவே உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. தொடக்கத்தில் முதல் இரண்டு மாதங்கள் படப்பிடிப்புக்காக தலை முடியை வளர்க்க சொல்லியும் மீசை தாடியை எடுக்க வேண்டாம் என்றும் பேசியிருந்தோம்.

ALSO READ: 'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்!'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி!

அதன் பிறகு அவ்வப்போது திரைப்பட பணி தொடர்பான அப்டேட் மற்றும் அவரிடம் சென்று கொடுத்துக் கொண்டிருந்தோம்.  அவரும் தன்னுடைய லுக் எப்படி வந்திருக்கிறது என்று புகைப்படமெடுத்து அனுப்பி ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மாஸ்டர் படத்தின் போட்டோ ஷூட் எடுத்தோம். அதுவே முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இருந்தது.

அதில் அவர் நன்றாகவே தலைமுடி, தாடி எல்லாம் வைத்து இருப்பார். அதன்பின் அந்த கெட்டப்புக்கு உண்டான எல்லா போர்ஷன்களையும் படப்பிடிப்பு செய்து முடித்தோம். இதற்குப் பிறகுதான் இந்த கெட்டப்புக்கு அப்படியே நேர் எதிரான இன்னொரு கெட்டப் பற்றி யோசித்தோம். ஏனெனில் விஜய் அண்ணா மீசை, தாடியின்றி நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. (ரவீந்தர்: கிட்டத்தட்ட கடைசியாக திருமலை படத்தில் அவர் நடித்து இருக்க வாய்ப்பு உண்டு).

ஆனாலும் இந்த கெட்டப்பை முயற்சித்த பின்னர் கேரவனில் அமர்ந்திருந்தார். அந்த கெட்டப்பில் அவர் அவ்வளவு ஸ்டைலிஸ்ட்டாக இருந்தார். இப்படித்தான் அவர்.. என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதை அவர் செய்துவிடுவார். இதைத்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. என்ன சொன்னாலும் அவருக்கு ஓகே தான் என்பார்.

இந்த படத்தைப் பொருத்தவரை, எனக்கு என்ன கதையை எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எடுங்கள் என்று விஜய் அண்ணா தெளிவாக சொல்லிவிட்டார். ஆனாலும் விஜய் அண்ணாவின் ரசிகர்கள் மற்றும் விஜய் மீதான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, நான் கைதி, மாநகரம் போன்ற திரைப்படங்களில் செய்த பரிசோதனை முயற்சிகளை இதில் செய்ய விரும்பவில்லை. எனக்கும் இதுபோன்ற முழுமையான ஜனரஞ்சக படத்தை எடுக்க வேண்டும் என்று இந்த கதையில் தோன்றியது. மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களும் ஜனரஞ்சக படங்கள் தான் என்றாலும் அப்படங்களுக்கான பணிகள் மாறுபட்டவை. இருள் நிறைந்த சூழல், ஒரு இரவில், கதாபாத்திரங்கள் ஒரே ஆடைகளை அணிந்துகொண்டு நடிக்கக்கூடிய கதைகள் அவை.

மாஸ்டர் திரைப்படத்தில் இந்தக் கதையுடன் சேர்ந்தபடியான, அதே சமயம் சரியான இடத்திலான பாடல்கள் உள்ளிட்டவற்றுடன் இப்படத்தை உருவாக்க நினைத்தேன். அனிருத் இசையில் வழக்கமான பல்லவி, சரணம் என்கிற விதிகளை தவிர்த்துவிட்டு நேரடியாக வார்த்தைகளை போட்டு உருவாக்கப்பட்ட பாடல்தான் வாத்தி கம்மிங். குட்டி ஸ்டோரி பாடலை பொருத்தவரை ஒரு துள்ளல் பாடலை எளிமையான, சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகளை கொண்டு உருவாக்க நினைத்தோம். முதல் வரியை அனிருத்தை கொடுத்தார், அந்த பாடல் நன்றாக உருவானது.

ALSO READ: "உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு".. இனிக்கும் பேச்சில் மயங்கி ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள்!.. வீட்டுக்கு வந்த ‘பவர் பேங்கில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்!’

இந்த படத்தை அனைவரும் படமாக பாருங்கள். விஜய் அண்ணாவின் எல்லா படங்களில் இருக்கும் விஷயங்கள் இதிலும் இருக்கும். அதே சமயம் அவை வழக்கமான பாணியில் இருக்காது. விஜயின் அறிமுகம், கதையின் தொடக்கம் என பல வழிகளிலும் சர்ப்ரைஸ்களுடன் இந்த திரைப்படம் இருக்கும். விஜய் போன்ற ஒரு மாஸ் நடிகருக்கு இணையான நம்பகத்தன்மையான வில்லன் கதாபாத்திரத்திற்காக தான் மிகவும் மெனக்கெட்டோம். அதுதான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. மற்றபடி விஜய் அண்ணா முழுமையாக நான் நினைத்த திரைப்படத்தை உருவாக்க இடம் கொடுத்தார்"..

லோகேஷ் கனகராஜின் விரிவான பேட்டிக்கு இணைப்பில் உள்ள வீடியோவை காணலாம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்