“நான் நடிச்சது நிஜ கேரக்டர்..! கைதாகி வெளிய வந்துட்டாங்க.. அவங்க பேர் கூட ..”.. Bakasuran லயா Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?

பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.

முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா அளித்துள்ளார். இதில், பகாசூரன் திரைப்படம் குறித்து நிறைய கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பகாசூரன் கதை உண்மையிலேயே நடந்ததா என்பது பற்றி கேட்கப்பட்ட போது பதில் அளித்த நடிகை லயா, “ஆமாம்.. இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் பொழுது இது பற்றி கூறினார். நான்கு வருடங்களுக்கு முன்பு எல்லா பத்திரிகைகளும் வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு பெண்ணின் கதாபாத்திரம் தான் இது. உண்மையிலேயே நடந்தது தான். அந்த பெண்ணும் ஒரு ஹாஸ்டல் வார்டனாகவே இருந்தார். அதன் பிறகு அவர் இந்த குற்றத்துக்காக கைதாகி ஜாமினில் வெளியானார், அது வேறு கதை. அவர் பெயர் கூட சு அல்லது எஸ் என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். அந்த கதாபாத்திரத்தைதான் நான் ஏற்று நடித்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read | எடைக்கு எடை தங்கம் தான் சீர்வரிசை..! மகள் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா ...

BAKASURAN, LAYA, INTERVIEW, EXCLUSIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்