"நான் Soft முதல்வர் என யாரும் நினைக்க வேண்டாம்".. ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | இது எப்படி இங்க வந்துச்சு.. 800 கிலோ எடைகொண்ட திமிங்கிலம்.. களத்துல இறங்கிய 80 வீரர்கள்.. கடைசியா மருத்துவர்கள் எடுத்த சோக முடிவு..!

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷன் கஞ்சா எனும் பெயரில் ஒவ்வொரு பகுதியிலும் அதிரடி பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இன்று போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் ஒவ்வொரு காவல்நிலையத்தின் ஆய்வாளரும் தங்களுடைய வரம்புக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருள் பயன்பாட்டை தடை செய்யவேண்டும் எனவும் அதுவே முதல் வெற்றியாக அமையும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் “போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு” டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, இந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

கடத்தல்

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வருவதை தடுக்க அண்டை மாநில காவல்துறையினரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய ஸ்டாலின், பள்ளி, கல்லூரி வளாகங்களில் உள்ள விடுதிகளில் பணியாற்றும் வாடர்ன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் மலையடிவாரங்களில் உள்ள கிராமங்களில் போதை பொருட்கள் பயிரிடப்படுகிறதா? என சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட முதல்வர், "போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்துபவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

எச்சரிக்கை

காவலர்கள் தவறு செய்யக்கூடாது என அடிக்கடி கூறி வருவதாகவும் குறிப்பாக போதை பொருள் கடத்தலுக்கு எந்த விதத்திலும் காவலர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட முதல்வர்,"இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் சாஃப்ட் முதலமைச்சர் என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு, குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்" என எச்சரித்தார்.

Also Read | "ஒரு பிரச்சனையில தீர்வு கண்டுபிடிக்கணும்னா இது ரொம்ப முக்கியம்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. வைரலாகும் பதிவு..!

MKSTALIN, DMK, CHIEF MINISTER MK STALIN, TN CM MK STALIN, முதல்வர் ஸ்டாலின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்