'மகனையும், மகளையும் தொந்தரவு பண்ணாதீங்க'...'சிக்கிய உருக்கமான கடிதம்'...சென்னையில் நிகழ்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் சந்திரன். இவ்ருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். தனது பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து சந்திரன், மனைவி விஜயலட்சுமி உடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் சித்ரா என்ற பெண் வேலை செய்து வந்த நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உடனே உள்ளே சென்று பார்த்த பணி பெண் சித்ரா அதிர்ச்சியில் உறைந்து போனார்.
படுக்கை அறையில் சந்திரன், அவருடைய மனைவி விஜயலட்சுமி இருவரும் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து தற்கொலை குறித்து அறிந்த ஓட்டேரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய சோதனையில் சந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் “நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே மாதா மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்து வந்தேன். தொடர்ந்து வட்டியும், அசலையும் கொடுக்க முடியாத விரக்தியில் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன் மற்றும் மகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க வேண்டாம்” என எழுதியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக சந்திரன் மயிலாப்பூரில் தான் வசித்து வந்துள்ளார். பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்து வந்த அவருக்கு திடீரென கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் சுமை அதிகமாக தனது சொந்த வீட்டை கடனாளிகளிடம் கொடுத்துவிட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது மனைவியுடன் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இருட்டு வீடு... மாத்திரை கேட்டு அடம் பிடிப்பார்.. தர்லன்னா அடிச்சிடுவார்'.. 30 வருட கொடுமை.. மகனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்!
- ‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- 'கர்ப்பிணிபோல் இருந்த பெண்கள்'... 'பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி'... 'சென்னையில் நடந்த பரபரப்பு'!
- ‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’!
- ‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..
- ‘துப்பாக்கி எங்க கிடைச்சது..?’ பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட சம்பவம்..! சரணடைந்த நண்பர்..!
- 'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'!
- ‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘கடற்கரை - தாம்பரம் இடையே’.. ‘மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- 'அழகா இருந்தாங்க.. நான் போதையில் இருந்தேன்'.. உணவு டெலிவரி ஊழியரால் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- 'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!