'கோபித்துக்கொண்டு' குழந்தையுடன் சென்ற 'மனைவி'!.. '45 அடி உயர' மேம்பாலத்தில் இருந்து 'கணவர்' செய்த 'குரூர' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புனே தத்தாவாடி பகுதியில் நாகப்பாவும்(வயது37), அவரது மனைவி பசம்மா கும்பாரும்(30) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நாகப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.

'கோபித்துக்கொண்டு' குழந்தையுடன் சென்ற 'மனைவி'!.. '45 அடி உயர' மேம்பாலத்தில் இருந்து 'கணவர்' செய்த 'குரூர' காரியம்!

இதனை அடுத்து தனது மகளை அழைத்துக்கொண்டு  அவரது மனைவி பசம்மா கும்பார் வீட்டை விட்டு வெளியேறி வாகேவாடி பஸ் நிறுத்தத்திற்கு, புறப்பட்டபோது, அங்குள்ள சங்கம் மேம்பாலத்தில் மகளுடன் நடந்து போன பசம்மா கும்பாரிடம் அங்கு வந்த நாகப்பா மனைவியிடம் சமரசம் பேச, மீண்டும் தகராறு எழுந்தது.

அப்போது ஆத்திரம் அடைந்த நாகப்பா, மனைவி என்றும் பாராமல் சுமார் 45 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளிவிட்டார். இதில் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர், வலியில் அலறிய பசம்மா கும்பாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  பின்னர் கணவர் மீது பசம்மா கும்பார் கொடுத்த புகாரின்பேரில் நாகப்பாவை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்