பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி.. கோவத்துல கணவர் செய்த பதறவைக்கும் காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பிறந்தநாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத வருத்தத்தில் கணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இந்த 4 இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க".. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை..!

சென்னை பல்லாவரம் அடுத்த பெருமாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 39 வயதான இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இருவரிடையே அடிக்கடி கருத்துவேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் கிருஷ்ணனின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பிறந்தநாள்

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அவருடைய மனைவி வாழ்த்து கூறாததால் மன வருத்தம் அடைந்த கிருஷ்ணன், மனைவிக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், போனிலும் அவர் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவி பிரிந்துபோன கவலையில் இருந்துவந்த கிருஷ்ணன் தனது பிறந்தநாளுக்கு கூட மனைவி வாழ்த்து தெரிவிக்காததால் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தனது அறையில் இருந்த கிருஷ்ணன் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். வீட்டில் சடலமாக கிருஷ்ணன் கிடப்பதை பார்த்த உறவினர்கள் கதறி அழுததுடன், பல்லாவரம் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | உலகத்திலேயே அதிக வயசு வாழ்ந்த நாய்க்கு நேர்ந்த சோகம்.. கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

CHENNAI, BIRTHDAY WISHES, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்