‘கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி..’ கணவர் சொன்ன அதிரவைக்கும் காரணம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலியில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவரது கணவர் கோமதி நாயகம் உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுதுள்ளார். முத்துமாரியின் சடலத்தைப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் மோப்ப நாயைக் கூட்டி வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அது அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வந்துள்ளது.
முத்துமாரியை அடக்கம் செய்யும்வரை அமைதியாக இருந்த போலீஸார் பின்னர் கோமதி நாயகத்திடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டிடத் தொழிலாளியான கோமதி நாயகம் மனைவி விரும்பிக் கேட்டதால் ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் இணையதள சேவையைப் பயன்படுத்திவந்த முத்துமாரி எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி இருந்துள்ளார். தொடர்ந்து நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்த முத்துமாரியின் நடவடிக்கையால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் முத்துமாரி ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்ததால் கோமதி நாயகம் ஆத்திரமடைந்துள்ளார். அரிவாளால் சரமாரியாக வெட்டி முத்துமாரியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல வெளியே சென்றுள்ளார். பின்னர் மனைவியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என நாடகமாடிய அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய அவர் பயன்படுத்திய அரிவாளைக் கைப்பற்றிய போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். ஃபேஸ்புக்கால் கணவர் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறையா’.. பேஸ்புக்கிற்கு வந்த சோதனை!
- ‘சந்தேகத்தால் கணவர் செய்த காரியம்..’ அதிர்ச்சியில் உறைந்துபோன போலீஸார்..
- 'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி!
- 'இதுக்காகவா.. மனைவியை மதம் மாத்தினார்?’.. 'எவ்வளவு ட்ரிக்ஸா வேல பாத்துருக்காப்டி' .. பரபரப்பு சம்பவம்!
- ‘சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி..’ கணவர் செய்த கொடூரம்..
- ‘இத மட்டும் பண்ணுனா உங்களுக்கு பணம்’.. வரயிருக்கும் பேஸ்புக்கின் அதிரடி திட்டம்!
- 'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!
- ‘ஃபேஸ்புக் கௌரவப்படுத்திய இந்திய மாணவர்..’ 19 வயதில் செய்த காரியம்..?
- ‘மனைவி தலையில் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்..’ கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..
- '22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்!