'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற?.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர் செய்வது, ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது வாடிக்கையாகி விட்டது.
இந்தநிலையில் மனைவி சமைக்கவில்லை என்பதால் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரி பகுதியில் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(24) இவரது மனைவி இலக்கியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
ஜெயராஜ் கார் டிரைவராகவும், இலக்கியா சென்னையின் பிரபல மால் ஒன்றிலும் பணியாற்றி வந்துள்ளார். இரவு வேலை முடிந்து அசதியில் வருவதால் இலக்கியா பெரும்பாலான நேரங்களில் உணவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி ஜெயராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். வீட்டில் இலக்கியா தூக்கில் தொங்கியுள்ளார். விசாரித்த அக்கம் பக்கத்தினரிடம் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். நான் தூங்கியபின் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று ஜெயராஜ் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து போலீஸ்க்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து இலக்கியா மரணம் தொடர்பாக ஜெயராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இலக்கியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இலக்கியா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவரம் வெளியானது.
இதைத்தொடர்ந்து ஜெயராஜிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், ஜெயராஜ் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புலால் சிறையில் அடைத்தனர். சமைக்காததால் மனைவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’!.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..!
- நாளுக்குநாள் 'தீவிரமடையும்' போராட்டம்.. ஹைதராபாத்தில்.. 144 தடையுத்தரவை அமல்படுத்திய போலீஸ்!
- ‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- 'இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?'.. 'செல்போன் கடை' ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்!
- 'நைட்டு' 12 மணிக்கு மேல.. சூடா 'தோசையும்' பீப்பும் எங்க கெடைக்கும்?.. போலீசை 'வம்பிழுத்த' இளைஞர்கள்!
- நீண்டநாள் ஸ்கெட்ச்.. விஷப்பாம்பை 'விலைக்கு' வாங்கி.. மனைவியை கொன்று.. 'நாடகம்' ஆடிய கணவர்!
- மைனர் சிறுமிகளால் ‘2 வயது தம்பிக்கு’ நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’ பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..
- ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!
- ‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..
- 5000 பக்க ரிப்போர்ட் ரெடி.. அடுத்த 'வாரம்' தூக்கிருவோம்.. குழந்தைகள் ஆபாச 'வீடியோ' விவகாரத்தில்.. போலீஸ் அதிரடி!