அம்மா வீட்டுக்கு போன மனைவி!.. ‘இதான் சமயம் என்று கணவர் செய்த பலே காரியம்!'.. நியாயம் கேட்டதற்கு ‘சாதியை வைத்து தகாத பேச்சு!’.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டிவனம் தாலுகா வண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற 25 வயது உடையவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் கொட்டாமேட்டை சேர்ந்த 32 வயதான ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் மஞ்சுளாவை அவருடைய பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னைக்கு வந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்திருக்கிறார். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் திண்டிவனத்திற்கு சென்று மஞ்சுளாவை பார்த்து வந்துள்ளார். இதனிடையே மஞ்சுளா கர்ப்பமாக இருப்பதை அறிந்த ராஜேஷ்குமார் மாத்திரை வாங்கி கொடுத்து கருவைக் கலைத்துள்ளார்.

பின்னர் 2014-ஆம் ஆண்டு மஞ்சுளாவை ராஜேஷ்குமார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.  இருவரும் திருவேற்காட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வாழத் தொடங்கினர். ராஜேஷ்குமார் வேலைக்கு சென்று வந்திருந்தார். இந்த சூழ்நிலையில்தான் மஞ்சுளா சொந்த ஊருக்கு வர, அவருக்கு தெரியாமல் அதே 2014ஆம் ஆண்டு கோமதி என்கிற பெண்ணை ராஜேஷ்குமார் 2வதாக திருமணம் செய்தார்.

இதை கேள்விப்பட்டதும் அதிர்ந்து போன மஞ்சுளா தனது கணவர் ராஜேஷ் குமாரிடம் நியாயம் கேட்கச் சென்றார். ஆனால் ஆத்திரத்தில் ராஜேஷ்குமார் மஞ்சுளாவை ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து மஞ்சுளா திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, இந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். விழுப்புரம் எஸ்சி., எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

ALSO READ: “பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!

இதனிடையே சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின்படி ராஜேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு 2 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.  இந்த சிறை தண்டனையை அடுத்து ராஜேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்