'இந்த நெலைமைல தான்...' 'இன்னும் அதிகமா காதலிக்கணும்...' 'ஓடி ஆடி காதலிச்சவங்க...' 'நடந்து 5 வருஷம் ஆயிடுச்சு...' - உருக வைக்கும் உன்னத காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 5 ஆண்டுகளாக கோமாவில் உள்ள காதல் மனைவியை குழந்தையை போல் பாதுகாத்து வரும் கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராகுலும் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்பவரும் பெங்களூருவில் வேலை பார்க்கும் போது காதலித்தனர். இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் திவ்யா கர்ப்பமானார். பிரசவத்திற்காக மாலூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அறுவை சிகிச்ைச செய்தால் மட்டுமே தாய்-சேயை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறினர். அதை ராகுல் ஏற்று கொண்டார். நள்ளிரவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் திவ்யாவுக்கு மயக்கம் தெளியாமல் இருந்தது. ஒருநாள், இருநாள் என்ற நிலை மாறி ஒருவாரம் கடந்தும் மயக்கம் தெளியாமல் இருந்ததுடன் மூச்சு விடுவதை தவிர உடலில் எந்த அசைவும் இல்லை.
இது குறித்து டாக்டர்களின் விசாரணை நடத்தியபோது, அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால், கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதை ேகட்டு அதிர்ச்சியடைந்த ராகுல், தனது மனைவியை காதலிக்கும்போது, எப்படி நேசித்தாரோ, அதை விட கூடுதலாக நேசம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்து வீட்டிற்கு அழைத்து வந்து தனி அறையில் அவரை வைத்து பராமரித்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள திவ்யாவை குழந்தையை போல், தினமும் காலை தொடங்கி இரவு வரை அவரின் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்து வருகிறார். ராகுலின் இந்த செயல்பாடு தொட்ட கடத்துர் கிராமத்தினர் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. தற்போது பலர் தாமாக முன்வந்து ராகுல் மற்றும் திவ்யாவுக்கு உதவி செய்து வருவதுடன் மனைவியை கவனித்துவரும் ராகுலை பாராட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'காதல்'ன்னு வந்துட்டா இங்க எதுவுமே தடையில்ல.. அதுக்கு இந்த ஜோடியோட 'லவ்' ஸ்டோரி தான் 'சாம்பிள்'.." 'காதலர்' தினத்தில் நடந்த அசத்தலான 'திருமணம்'!!
- '37 வருசத்துக்கு முன்ன செய்த உதவி...' 'நன்றி மறக்காத அன்னப்பறவை...' - என் சொந்த மகளா தான் பார்க்கிறேன்...!
- 'லவ் பண்றப்போ...' 'எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா விட்டுட்டு போய்டுவியான்னு கேட்பார்...' 'அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையாது...' - கண்கலங்க வைக்கும் காதல்...!
- 'என் ரெண்டு காலும் போய்டுச்சு...' 'நீ சின்னப்புள்ள...' 'வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ...' 'மனைவி எடுத்த முடிவு...' - நெகிழ வைக்கும் காதல்...!
- "இத விட என்ன பெரிய 'ஃகிப்ட்'ங்க... ஒருத்தரால 'Valentines Day' அன்னைக்கி குடுத்துட முடியும்??..." மெய்சிலிர்க்க வைத்த 'தம்பதி'... இதுதான்யா உண்மையான 'லவ்'!!!
- கொரோனா வைரஸா? அப்படின்னா என்ன...? '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...!
- 'டாய்லெட்க்கு கூட எழும்பி போக முடியாது'... 'தம்பிக்காக சொத்தையும் வித்தாச்சு'... '14 வருசமா படுத்த படுக்கை'... நெஞ்சை நொறுக்கும் அண்ணனின் பாச போராட்டம்!
- 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா'... காதலித்து ஏமாற்றியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்!
- “எங்க போனீங்க மார்க்? எனக்கு பசிக்குது!” - அன்பு நண்பர் இறந்ததை அறியாத காட்டு யானை.. தினமும் ஏக்கத்துடன் ரிசார்ட்டுக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- சினிமா பாணியில்.. 11 மாதம் கோமாவில் இருந்து.. தற்போது மீண்ட இளைஞர்!.. ”கண் முழிச்சதும் இத பத்தி கேக்குறானே? எப்படி சொல்றது?” - தவிக்கும் உறவினர்கள்!