வெளிநாட்டிலிருந்து வந்த 'கணவனிடம்' ... நகையைக் கொடுக்க மறுத்த 'மனைவி' ... இறுதியில் 'கணவன்' செய்த 'கொடூர' செயல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் அருகே நகைகளைக் கொடுக்க மறுத்த மனைவியை கொலை செய்து விட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டிலிருந்த முனீஸ்வரன் அங்கிருக்கையில் மனைவியின் செலவுக்கு பணம் எதுவும் அனுப்பாமல் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்த முனீஸ்வரன் மற்றும் தனலட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த பதினெட்டாம் தேதி இரவு, மனைவியின் நகையைக் கேட்டு முனீஸ்வரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனலட்சுமி நகைகளை தர மறுக்கவே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தனலட்சுமி உயிரிழந்த நிலையில் தேவிபட்டினம் காவல் நிலையம் சென்ற முனீஸ்வரன் போலீஸாரிடம் நடந்ததை கூறி சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். நகையை கொடுக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்!
- 'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி
- 'அவங்களுக்கு மட்டும் தான் லீவு' ... 'நீங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துருங்க' ... பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த முதன்மை 'கல்வி அலுவலர்'!
- "ரஜினிகாந்த் அரசியல் களம் காண்பது காலத்தின் கட்டாயம்..." "தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக பேசியது... நேர்மையின் உச்சம்..." 'ரங்கராஜ் பாண்டே' புகழாரம்....
- 'ஐடியா இருந்தா குடுங்க' ... 'டெஸ்ட் பண்ணி அங்கீகாரம் குடுக்குறோம்' ... சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!
- 'என் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சுது' ... பேருந்து நிலையத்தில் நின்ற பெண்ணிடம் ... மது போதையில் நபர் செய்த ரகளை!
- 'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
- 'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
- 'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!