மூன்றாவதும் பெண் குழந்தையா... கணவன் மனைவி சண்டை... விட்டு கொடுக்காத தாய் பாசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு சில வீடுகளில் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை நடக்கும். அப்படி இல்லை என்றால் மாமியார் மருமகள் சண்டை அல்லது குடும்பத்தில் இருக்கும் வேறுநபர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படும். விடிஞ்சா போதும், இந்த வீடா அப்பப்பா எப்பொழுதும் ஒரே சண்டை தான் என பலரும் கூறும் வகையில் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும்.
என்னதான் சுமூகமான சூழ்நிலையில் வாழ நினைத்தாலும் இவ்வாறான பிரச்சினைகள் வருவது என்பது இயல்புன ஒரு விஷயம்தான். ஆனால் இதுதான் பிரச்னையா என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதான மோகம் காரணமாக இந்தியாவில் 2.10 கோடி சிறுமிகள் தேவையில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆண் பிள்ளை மோகத்தால் பெண் பிள்ளைகளை ஒதுக்கி வைக்கும் அரங்கேறி வருகிறது.
ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் குழ ந்தைகளை கருவிலேயே கலைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அந்தவகையில் பெண் குழந்தை பிறந்ததற்காக கவணன் மனைவியை திட்டிய சம்பவம் மணப்பாறையில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாவது குழந்தை பிரசவத்திற்காக மணப்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் தனலெட்சுமியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த தனலெட்சுமி கணவர் திட்டிய கோபத்தில் மருத்துவமனையை விட்டு மருத்துவமனை வளாகத்தில் பிறந்த குழந்தையை விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வீடு திரும்பினாலும் தாய் பாசம் தனலெட்சுமியை தூங்க விடவில்லை. மருத்துவமனைக்கு சென்று தனது குழந்தையை தேடியுள்ளார்.
வளாகத்தில் கிடந்தை குழந்தையை மீட்ட அங்கிருந்த கட்டிட தொழிலாளர்கள் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின்பு திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை செய்தித்தாளில் படித்துவிட்டு பதறி போன தனலெட்சுமி கண்கலங்கியபடி தனது குழந்தையை மீட்டுத் தர கோரி காவல் நிலையம் சென்றார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
- கையில் பையுடன் வந்த பெண்.. பைக்குள்ள இருந்தத பார்த்து வெலவெலத்து போன போலீஸ்!.. பரபரப்பு சம்பவம்!!
- என் மாமியாருக்கு கிட்னிய கூட கொடுத்தேன்.. ஒரே மாசத்துல என் காதலி இப்படி பண்ணிட்டு போவான்னு கனவுல கூட நினைக்கல.. கண்ணீரில் காதலன்
- சில்லி சிக்கன் சாப்பிட்டது குத்தமாயிடுச்சு.. ஊருக்கே வந்த சிக்கல்!
- தொழிலாளியிடம் வழிப்பறி செய்த திருடர்களை விரட்டிப்பிடித்த நிஜ துரைசிங்கம்..!
- தென் தமிழகம் தான் டார்கெட்.! பெண்களிடம் நூதன கொள்ளை!.. எப்படி பிடிச்சாங்க? நிஜத்துல ஒரு 'தீரன்' சம்பவம்!
- ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கைமாறிய குழந்தை... நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைப்பு!
- நீங்க தான் என் அம்மாவா? 22 வருஷம் எங்கம்மா போயிட்ட? கண்ணீர் வரவழைக்கும் பாசக்கதை
- ஜீப்பில் கைவிலங்கோடு காவல்துறைக்கு கம்பிநீட்டிய நபர்..!
- செங்கல்பட்டில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த போலீசார்.. வெளியான பரபரப்பு பின்னணி..!