‘கல்யாணம் முடிஞ்சு 4 மாசமா வீட்டுக்கு வராத கணவன்’.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் துணைமேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் தங்கமணியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற சிவனேசன், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிருந்தாதேவி என்ற பெண்ணை சிவனேசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை அடுத்து திருமணமான ஒரு வாரத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிவனேசன் சென்றுள்ளார்.
ஆனால் பல மாதங்கள் கடந்தும் சிவனேசன் சொந்த ஊருக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பிருந்தாதேவி செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை எப்போது அழைத்து செல்வீர்கள் என சிவனேசனிடம் கேட்டுள்ளார். அப்போது பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிருந்தாதேவி, சிவனேசன் வேலைபார்க்கும் நிறுவனத்துக்கே நேரில் சென்றுள்ளார். அங்கு சிவனேசனை பற்றி விசாரித்து அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் வேறொரு பெண் 5 வயது மகளுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போதுதான் தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிருந்தாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவனேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடுரோட்டில் வலிப்பு வந்து துடித்த இளைஞர்’.. காரை நிறுத்தி உயிரை காப்பற்றிய டாக்டர்.. குவியும் பாராட்டுகள்..!
- ‘கோயிலில்’... ‘திருமணம் செய்த காதல் ஜோடிக்கு’... ‘சில மணி நேரத்திலேயே’... ‘பெண் வீட்டாரால் நிகழ்ந்த பரிதாபம்'!
- ‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- குழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...
- நண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘என்னை பலாத்காரம் பண்ணிட்டார்’.. கணவர் மீது புகார் கொடுத்த மனைவி.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!
- மனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!
- 'ஏன்டா இப்படியாடா ஓடுவ...!' திடீரென வீட்டிலிருந்து ஓடிய மாப்பிள்ளை... பின்னாடியே ஓடிய உறவினர்கள்... சுவாரஸ்யமான சம்பவம்...!
- அன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..!