விவகாரத்து நோட்டீஸ்ல கையெழுத்து போட மாட்டேன்.. மறுத்த மனைவியை தாக்கிய கணவன்.. தடுக்க வந்த மகளுக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமை காவலர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உக்ரைன் மேல ரஷ்யா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தல.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள (SCP) எனப்படும் சென்னை செக்யூரிட்டி போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று 3 மகள்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி சண்டை

இந்த நிலையில் இவருக்கும் இவரது மனைவி பூர்ணிமாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ராஜேந்திரன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சண்டையிட்டு வந்தாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை மனைவியிடம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து இடுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

விவகாரத்து நோட்டீஸ்

இதனை அடுத்து சண்டை போட்டு சென்றுவிட்ட ராஜேந்திரன் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே, ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் இடது கை மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். தடுக்க வந்த 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் பத்மினியையும் குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடையவே, ராஜேந்திரன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அலறல் சத்தம்

இதனிடையே பத்மினி மற்றும் பூர்ணிமாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணவன் போலீசில் சரண்

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய கணவர் ராஜேந்திரன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போடாததால் காவலர் ஒருவர் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நான் மட்டும் இப்போ அமெரிக்க அதிபரா இருந்திருந்தா...!’ உக்ரைன்-ரஷ்யா விவகாரம்.. டிரம்ப் பரபரப்பு கருத்து..!

HUSBAND, ASSAULT, WIFE, DAUGHTER, DIVORCE ISSUE, மனைவி, கணவன், விவகாரத்து நோட்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்