வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அங்கே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்.
![வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!! வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/husband-arrested-after-his-wife-passed-away-police-enquiry-thum.jpg)
Also Read | பாதியில் நின்ன படிப்பு.. உடனே இளைஞர் எடுத்த புது ரூட்.. "ஒரு வருஷத்துல இத்தன கோடி ரூபாய் வருவாயா?"
மதுராந்தகம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்பார்வையாளராக அவர் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவரது மனைவி பெயர் சுதாமதி. இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித் குமார் - சுதாமதி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணி அயன் செய்து கொண்டிருந்த தனது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போனதாக அக்கம் பக்கத்தினரிடம் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்தியில், மனைவியின் உடலையும் அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்யவும் முயன்றுள்ளார் ரஞ்சித் குமார்.
அப்படி ஒரு சூழலில் தான் சுதாமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடம் வந்த போலீசார் சுதாமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். அப்போது முதற்கட்ட ஆய்வில் கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது.
சுதாமதியின் தலை பகுதியில் பலத்த காயம் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சுதாமதியின் கழுத்திலும் கயிறால் இறுக்கப்பட்ட தடங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சுதாமதியின் கணவர் ரஞ்சித் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலையை முடித்து விட்டு ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி சுதாமதி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தேகத்தில் மனைவியிடம் விசாரிக்கத் தொடங்கி உள்ளார் ரஞ்சித் குமார். மேலும், அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் உருவானதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த ரஞ்சித், மனைவியை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக தான் அயன் செய்த போது மின்சாரம் தாக்கி மனைவி உயிரிழந்ததாகவும் நாடகமாடி உடலை அவசரமாக புதைக்கவும் திட்டம் போட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read | "பிரியாணி கேட்டதுக்கா இப்படி?".. கோபத்தில் இருந்த கணவர்.. அடுத்த கணமே கேட்ட அலறல் சத்தம்!!.. மிரண்ட அயனாவரம்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!
- ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த மனைவி.! கண்டித்தும் கேட்காததால் கணவர் செய்த பகீர் காரியம்..?
- எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!
- பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்
- பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி.. வீடியோ..!
- "அந்த ஷூவை கொடுங்க".. கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. பட்டுச் சேலையை பிரிச்சதும் பம்மிய பயணி.. பகீர் வீடியோ..!
- வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
- காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. கேரளாவையே நடுங்க வச்ச இளம்பெண்.. பகீர் சம்பவத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்.. முழு விபரம்..!
- தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!