8 ஆண்டுகள் தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கணவன்.. சென்னையை பரபரப்பாக்கிய வழக்கு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாய், மகனை கொன்றுவிட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கேட்ச் பிடிக்கும்போது வழுக்கி விழுந்த கேப்டன்.. நல்லவேளை காயம் ஏற்படல.. இல்லைன்னு ஃபைனல்ல அவ்ளோ தான்..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மகேஷ் குமார் (வயது 7) என்ற மகன் இருந்தான். இந்த சூழலில் உடல் நிலை சரியில்லாமல் கணவர் மாரி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த கொத்தனார் ராஜ் (வயது 40) என்பவரை இரண்டாவது குணசுந்தரி திருமணம் செய்து கொண்டு அவருடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார்.

ஆனால் ராஜின் கொடுமை தாங்காமல் கோபித்து கொண்டு புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனது தாய் நாகவள்ளி வீட்டிற்கு குணசுந்தரி தனது குழந்தையுடன் வந்துவிட்டார். இந்த நிலையில், குணசுந்தரியை பார்ப்பதற்கு மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்த ராஜ், மனைவி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குணசுந்தரி அவரது மகன் மகேஷ் குமார் ஆகிய இருவரையும் கொன்றுவிட்டு ராஜ் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 ஆண்டுகளாக ராஜை தேடிவந்தனர். அப்போது ராஜின் புகைப்படத்தை ஆந்திர மாநில போலீசாருக்கு அனுப்பினர். ஆந்திர போலீசார் தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்பி வைத்து இவர் குறித்த தகவல் தெரிந்தால் தங்கள் செல்போன் எண்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதன்பின்னர் ராஜின் புகைப்படம் மற்ற வாட்ஸ்அப் குழுவுக்கு பகிரப்பட்டு வந்தது. அப்போது ராஜ் இருக்குமிடத்தை ஆந்திராவை சேர்ந்த ஒரு இளைஞர், தனிப்படை உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நபர் தனது வீட்டிற்கு கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், அவர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு தினமும் இரவு 7 மணிக்கு மேல் வருவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார், மறைந்திருந்து ராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘யாருப்பா அந்த பையன்?’.. அம்பயர் அவுட் கொடுக்குறதுக்கு முன்னாடியே வெளியேறிய வீரர்.. பாராட்டும் ரசிகர்கள்..!

HUSBAND, WIFE, ARREST, WIFE DEATH CASE, கணவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்