'சார்... அந்த வீட்ல கஞ்சா வியாபாரம் நடக்குது...' 'ரேட் எவ்வளவு சொன்னாலும் சாராயம் வாங்க ரெடியா இருந்தாங்க, அதான்...' கள்ளச்சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி வாக்குமூலம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாத நிலையில் ராஜபாளையத்தில் கணவன் மனைவி இணைந்து  கள்ளச்சாராயம் காய்ச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அய்யனார் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையில் உள்ள, இந்திரா நகர் பச்சை காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் கஞ்சா விற்கப்படுகிறது என போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அய்யனார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கஞ்சா ஏதும் கிடைக்காதலால், போலீசார் தவிர பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தம்பதிகளை கைது செய்த போலீசார், அங்கிருந்த 150 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை அழித்தனர். மேலும் சாராயம் காய்க்க பயன்படுத்திய பானை மற்றும் பிற பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட அய்யனார் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் அதில், ''தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மது பாட்டில்கள் வாங்க நிறைய ஆண்கள் சுற்றி வந்ததை பார்த்தேன். மேலும் இந்த நேரத்தில் மது குடிப்பவர்கள் எவ்வளவு காசு கொடுத்தும் மது வாங்க தயாராக உள்ளனர். அதனால் தான் கள்ளச்சாராயம் காய்ச்ச முடிவெடுத்தோம். இதனால் லாபம் கிடைப்பதால் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தோம்' என தங்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர். அத்தம்பதிகள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LIQUOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்